இன்றைய குறள்

Tuesday, January 14, 2014

தமிழர் பெருநாள்

தை மகள் பவனி வருகிறாள்
தன் மனம் போல்
வெள்ளை வண்ணத்தை பூசிய
பச்சரிசியை பானையில்
எடுத்துக்கொண்டு
பவனி வருகிறாள்

மனதினுள் இருளாய்
வீற்றிருக்கும்
அகந்தையை அகற்ற
கருமை வண்ண கரும்பு
ஏந்தி
பவனி வருகிறாள்

சேற்றில் கால் பதிக்கும்
விவசாயியின்
கால் வண்ணத்தலில் இருக்கும்
சர்க்கரை பொங்கலோடு
பவனி வருகிறாள்

தமிழன் வாழ்வு மங்களகரமாக
அமைய
மஞ்சள் கிழங்குகளோடு
பவனி வருகிறாள்

தை மகளே வருக
தமிழர் துயர் தீர்க்க வருக
மகிழ்ச்சி பொங்க வருக
தமிழர் வாழ்வுயர வருக
தை மகளே வருக

பொங்கலோ பொங்கல்

பொங்கல் வாழ்த்துகள்
அறுவடை நாள் வாழ்த்துகள்
உழவர் திருநாள் வாழ்த்துகள்
தமிழர் பெருநாள் நல்வாழ்த்துகள்

பொங்கலோ பொங்கல்

1 comment:

  1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.