இன்றைய குறள்

Tuesday, December 31, 2013

வாழ்வில் உயர


அனைத்தும் நம் எண்ணத்தில் தான் இருக்கிறது....

எண்ணம் நல்லதையும் காட்டும்
தீயதையும் காட்டும்.

தீயது எளிமையாக மனதை சென்றடையும்
நல்லவை புத்திக்கு செல்வதை தடுக்கும்

தடையை தகர்க்கும் பொழுது
நிறைய புலப்படும்.

தடையில் பாடங்களும் உண்டு
காயங்களும் உண்டு

காயத்திற்கு மருந்தும்
மனது தான்

காயம் ஆற காத்திருக்கும் பொழுது
தடைகள் அதிகமாக வாய்ப்பும் இருக்கிறது
தடைகள் அகன்று போகவும் வாய்ப்பு இருக்கு

அகன்று விட்டால் நன்மையே.

ஆனால் அத்தருணத்தில் இழப்புகள் அகிகமாகும்
தொடர்புகள் துண்டிப்படலாம்
மனதில் பதிந்தது மறந்து போகலாம்

மறந்தது நினைவில் வருவது அரிது.

ஆனால் சில நினைவுகள் பசுமையாக இருக்கும்

மகிழ்ச்சி நினைவுகளால் காயத்தை
மறப்போம்
சோக நினைவுகளால் துயரத்தை
மேலும் அதிகமாக்குவோம்

உண்மை மனதில் தங்கி
நம்மை கொல்லும் தீயதாக இருந்தால்
நம்மை திடமாக்கும் நன்மையாக இருந்தால்

பிரித்துப்பார்க்க தெரியவில்லை என்றால்
பிடித்ததும் பிடிக்காததும்
ஒன்று போல தெரியும்.

ஆராய்தல் முக்கியமாக தேவைப்படுகிறது
அப்பொழுது நம்மை நாம் புரிதல் அவசியமே

ஆம்

நாம் உயர நம்மை தான் புரிந்து கொள்ள
முயலவேண்டும்.

6 comments:

 1. தலைப்பும், கடைசி வரியும் எல்லாவற்றையும் சொல்லி விட்டன...! பாராட்டுக்கள்....

  ReplyDelete
 2. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

   Delete
 3. வணக்கம்
  சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. அன்புடையீர்.
  தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.