கரம் பிடித்த நாளில் உனை பிரிந்த சோகம்,
கை கோர்த்த பொழுதினில் விரல்கள் பிரிந்த தாக்கம்,
உன் கண்கள் எனை நோக்கி பாடிய கீதம்.
இன்றும் கலக்கத்தில் என் நெஞ்சம்.
உன்னை பிரிந்திருக்கும் தூரம்,
மனதில் என்றும் உன் உருவம்,
நீ அழைப்பாய் என்றெண்ணும் தருணம்,
உடனே அலைபேசி சிணுங்கும் நேரம்,
நீ தான் என்று என்னுள்ளம் எண்ணும் தருணம்,
"ஹலோ" என்று உன் குரலின் சப்தம்,
அக்கணமே எனக்குள் ஒரு நிசப்தம்...
கண்விழித்தே நான் சென்றேன் கனவுலகம்
இதுதானோ நான் வாங்கிவந்த வரம்
இப்படிக்கு,
நாட்டை கடந்து வந்த உன் கணவன்
மிகவும் வருத்தம்...
ReplyDelete