இன்றைய குறள்

Wednesday, June 26, 2013

வலிகளில் வழிகள்

பூ போல் நீ அழகு
என்றால்
அதை அடைய
காயம்பட்ட நானும் அழகு

காயத்திற்கு வித்திட்ட என் காதலும்
அழகு...

=====================================================

உன்னை அடைவது அத்தனை
சிரமமா?
எனக்கு தெரியவில்லை

இலக்கு,
உன் காதலாக இருக்கும் பட்சத்தில்.............

=====================================================

நீ தரும் வலிகள்
அனைத்தும்
நீர்த்துப்போனது

உன் காதலை எனக்களித்த பொழுது

=====================================================

குருதி வழிந்து
ரணமான பொழுதிலும்
உன் அன்பான
அரவணைப்பு போதும் அன்பே

காலம் முழுவதும் ரணப்படுவேன்.....

=====================================================

காதல் தேர்வில் தேர்ச்சிபெற முற்களின் மீது குருதியால் விடை எழுதினேன்,

முடிவில் ரணங்கள் மறைந்தன

2 comments:

பழமொழி