படம்: குட்டி புலி
பாடல்: அருவாக்காரன் அழகன் பேரன்
இசை: எம்.ஜிப்ரான்
பாடலாசிரியர்: வைரமுத்து
அருவாக்காரன் அழகன் பேரன்
அடிநெஞ்ச தேச்சு போனான் தாடிக்காரன்
ஆந்தக் கண்ணன் அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசக்காரன்
எரை வைத்து சிக்காத பறவ போல
என் கையில் சிக்கலயே எளையன் காள
ஓடும் நீரில் காணும் கரையும்
கூட வாரேன் நிழல போல
அருவாக்காரன் அழகன் பேரன்
அடிநெஞ்ச தேச்சு போனான் தாடிக்காரன்
ஆந்தக் கண்ணன் அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசக்காரன்
கிறு கிறு கிறு கிறுவென வருகுது
ஒரு கீழ் பார்வை பார்கையில
விறு விறு விறு விறுவென உருகுது
மனம் வெரச நீ போகையில
போகுதே உயிர் பாதியில
போ போ போகுதே உயிர் பாதியில
வெட வெட வெட வென விறு விறுவென
மேல் காத்து வீசையில
மட மட மட மட மனசறியுது
ஒரு மாராப்பு ஆசையில
பூக்கவா உன் சாலையில
தங்கம் நான் என்ன தேய்க்க வா
தாலியில் கட்டி மேய்க்க வா
வீங்கும் நெஞ்ச வாங்கிக் கொள்ள
வா டா வா டா
அருவாக்காரன் அழகன் பேரன்
அடிநெஞ்ச தேச்சு போனான் தாடிக்காரன்
ஆந்தக் கண்ணன் அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசக்காரன்
பட படவென பொலம்புது பொண்ணு
பனங்காட்டு மழையாக
நழுவுது ஒதுங்குது பனங்குது மனம்
நரி கண்ட நாடாக
ஓடுதே உயிர் நூறாக
கண்ணு முழி கெரங்குது மயங்குது
சிறு கண்ணாறு நீராக
கல கலவென ஒரு சொல் சொல்லு
யார் பாக்க போறாங்க
தேயுதே உடல் நாராக
தே தே தேயுதே உடல் நாராக
கோணலாய் மனம் ஆனதே
நாணலாய் அது சாயுதே
அண்ணாக் கயிறில் தாலி கட்ட
வா டா வா டா
அருவாக்காரன் அழகன் பேரன்
அடிநெஞ்ச தேச்சு போனான் தாடிக்காரன்
ஆந்தக் கண்ணன் அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசக்காரன்
எரை வைத்து சிக்காத பறவ போல
என் கையில் சிக்கலயே எளையன் காள
ஓடும் நீரில் காணும் கரையும்
கூட வாரேன் நிழல போல
No comments:
Post a Comment