இன்றைய குறள்

Thursday, April 25, 2013

Borussia Dortmund vs Real Madrid 2013 [போருசியா டார்ட்மண்டு vs ரியல் மாட்ரிட் சான்பியன்ஸ் கோப்பை இரண்டாவது அரையிறுதி]

ஜெர்மனியின் போருசியா டார்ட்மண்டு மற்றும் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டியின் முதல் சுற்று டார்ட்மண்டுவின் சொந்த மண்ணில் நடந்தது. தமிழக நேரம் 25-Apr-2013 நள்ளிரவு 00:15மணிக்கு துவங்கியது

போருசியா டார்ட்மண்டு அணி ஒரே ஒரு முறை (1997) வாகையர் பட்டத்தை சூடியுள்ளது. இந்த முறை அரையிறுதிக்குள் நுழைய காலிறுதியில் ஸ்பெயின நாட்டின் வேலன்சியா அணியுடன் கடுமையாக போராடி கடைசி நிமிடத்தில் அடித்த ஒரு இலக்கினால் உள்ளே நுழைந்துள்ளது. கண்டிப்பாக பலம் பொருத்திய அதிக முறை வாகையர் பட்டம் சூடியுள்ள ரியல் மாட்ரிட் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால் டார்ட்மண்டு அணி சுமாரான அணி தான். இருந்தாலும் கால்பந்து விளையாட்டில் எதுவும் நடக்கலாம் என்ற எண்ணம் இருந்தது.

ஆட்டம் விறுவிறுப்பாக துவங்கியது. ஆட்டத்தின் துவக்கத்தில் போருசியா டார்ட்மண்டின் ஆட்டம் மேலோங்கி இருந்தது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் அந்த அணியின் லேவண்டோவோஸ்கி அருமையாக இலக்கினுள் பந்தை அடித்து 1-0 என்ற இலக்கு கணக்கில் போருசியா டார்ட்மண்டை முன்னிலை வகிக்க வைத்தார்.

20வது நிமிடத்தில் போருசியா டார்ட்மண்டு இலக்கிற்கு அருகில் மிதந்து வந்த பந்தை ரொனால்டோ தலையில் முட்ட முயற்சி செய்தார். ஆனால் பந்து சற்று உயரமாக சென்றதால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த பந்தை கையில் தடுத்ததால் காப்பாளார் கட்டத்திருக்கு வெளியே தண்டம் கொடுக்கப்பட்டது. அதை நட்ச்சத்திர வீரர் ரொனால்டோ நேர்த்தியான முறையில் இலக்கினுள் அடித்தார். ஆனால் காப்பாளர் வேயடேன்பிளர் சிறப்பான முறையில் தடுத்தார்.  போருசியா டார்ட்மண்டின் பயிற்சியாளர் பெருமூச்சி விட்டார்.

மேலும் 27வது நிமிடத்தில் மேலும் இதே போல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ காப்பாளார் கட்டத்தினுள் அடித்தார். ஆனால் தடுப்புகள வீரர்களால் அது முறியடிக்கப்பட்டது.

அடுத்த இரண்டு நிமிடங்களில் அதே போல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மாட்ரிட் அணியின் அலோன்ஸோ பந்தை காப்பார் கட்டத்திற்கு உள்ளே அடித்தார். காப்பாளர் முன்னே வந்து அதை கையால் முட்டி வெளியே தள்ளி தகர்த்தெரிந்தார்.

ரியல் மாட்ரிட் அணியினரின் முன்னேற்றம் காணமுடிகிறது. மிக மிக அருமையான முறையில் ஆடினார்கள்.  எப்படியும் இலக்கு அடிக்கவேண்டும் என்ற முனைப்பு தெரிந்தது.

ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் போருசியா டார்ட்மண்டின் தடுப்புக்கள வீரர் செய்த பிழையை பயன்படுத்தி ஹிகுயன் பந்தை லாவகமாக கடத்தி சென்றார். அவரை நோக்கி காப்பாளர் செல்ல, அவர் ரோனால்டோவிடம் பந்தை வழங்க அவர் இலக்கினுள் அடித்தார். இதன் மூலம் 1-1 என்று ஆட்டம் சமநிலை அடைந்தது.

முதல் பாதியில் இறுதி நொடிகளில் வழங்கப்பட்ட பந்தை ரொனால்டோ சறுக்கி வந்து இலக்கினுள் அடிக்க முயன்றார். ஆனால் தடுப்புகள வீரர்கள் அதை தகர்த்தனர்.

இத்துடன் முதல் பாதி முடிந்தது. இதன் மூலம் ரியல் மாட்ரிட்க்கு கூடுதல் லாபம் உண்டு. எதிரணி ஆடுகளத்தில் ஒரு இலக்கு அடித்துள்ளனர்.

முதல் பாதியில் சமநிலையில் இருந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதி துவங்கி ஐந்து நிமிடத்தில், இலக்கின் இடப்பக்கத்தில் கிடைத்த கார்னர்கிக் மூலம் மீண்டும் ரேயுஸ் அடித்த பந்தை லேவண்டோவோஸ்கி மீண்டும் ஒரு இலக்கு அடித்தார். இதன் மூலம் 2-1 என்ற இலக்கு கணக்கில் போருசியா டார்ட்மண்டை முன்னிலை வகிக்கித்தது.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ரேயுஸ் கடத்தி சென்ற பந்தை பறிக்கும் முயற்சியில் கஹெதிரா செய்த கடுமையாக தடுப்பில் அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. அடுத்து ஷமேல்சர் அடித்த பந்தை மீண்டும் இலக்கினுள் அடித்து லேவண்டோவோஸ்கி மீண்டும் ஒரு இலக்கு அடித்து 3-1 என்ற இலக்கு கணக்கில் முன்னிலை பெறவைத்தார். 

இதன் இரண்டு இரண்டு இலக்கு முன்னிலை வகித்தது போருசியா டார்ட்மண்டு. சொந்த ஆடுகளத்தில் சிறப்பாக ஆடினாலும் அடுத்த சுற்று ஆட்டம் ரியல் மாட்ரிட் ஆடுகளத்தில் இருக்கும் பட்சத்தில் கடுமையாக போராட வேண்டும் இந்த முன்னிலையை தக்கவைக்க. 

அடுத்த மூன்று நிமிடத்தில் ரியல் மாட்ரிட்டின் மொடேறிக் அடித்த பலமில்லாமல் அடித்த பந்தை காப்பாளர் வேயடேன்பிளர் சிரமம் இல்லாமல் பிடித்தார். 

 லேவண்டோவோஸ்கி அடித்த மூன்றாவது இலக்கு மூலம் ஐரோப்பியா கால்பந்து கழகங்களுக்கு இடையே நடக்கும் ஆட்டங்களில் அதிக இலக்கு அடித்த போலாந்து நாட்டு வீரர் என்ற சாதனை புரிந்தார். ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் வலது பக்கத்தில் இருந்து மிதந்து வந்த பந்தை ரியல் மாட்ரிடின் ஹிகுயேன் இலக்கினுள் அடிக்க முயற்சி செய்தார், மீண்டும் காப்பாளர் பிடித்தார். அப்பொழுது மூன்று ரியல் மாட்ரிட் வீரர்கள் ஆப்சைடில் இருந்தனர். 

ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் ரேயுஸ் மீது ஆலோன்ஸோ காப்பாளர் கட்டத்தின் உள்ளே நடத்திய கடுமையான முயற்சி மூலம் தண்டமாக பெனால்டி வழகப்பட்டது போருசியா டார்ட்மண்டுக்கு. மீண்டும் இலக்கினுள் அடித்து 4 - 1 என்ற கணக்கில் முன்னிலை வைகிக்க வைத்தார் லேவண்டோவோஸ்கி. 

இந்த இலக்கின் மூலம் பத்தாவது முறையாக 4 இலக்குகள் சாம்பியன்ஸ் கோப்பையில் அடிக்கப்பட்டது. அதில் பார்செலோனாவின் லியோனல் மெஸ்சி 2 முறை அடித்துள்ளார். 

ஆட்டத்தின் கடைசி 10 நிமிடத்தில் அல்சொன்ஸோக்கு பதில் கக்கா உள்ளே நுழைந்தார். அவருடைய வரவு ஆட்டத்தில் நிச்சயம் மாறுதல் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ரியல் மாட்ரிடுக்கு கூடதலாக ஒன்றும் நடக்கவில்லை.  இதன் மூலம் இரண்டாவது அரையிறுதி போட்டியில் போருசியா டார்ட்மண்டு 4-1 என்ற கணக்கில் முன்னிலை வைகித்து இறுதி போட்டிக்கு செல்லும் வலிமையாக நிலையில் இருந்தது. 

இரண்டு அரையிறுதி போட்டிகளும் ஸ்பெயின் கால்பந்து கழகங்களுக்கும் ஜெர்மனி கால்பந்து கழகங்களுக்கும் இடையே நடந்தது. அனைத்து கால்பந்து ஆர்வளர்களுக்கும், தொகுப்பாளர்களும் இறுதி போட்டி ஸ்பெயின் நாட்டு கால்பந்து கழகங்களுக்கு இடையே நடக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு ஜெர்மானிய அணிகளும் 4-0 மற்றும் 4-1 என்ற இலக்கு கணக்கில் வெற்றி பெற்று அந்த கணிப்பை தகர்த்தேறின்தனர்.

இறையிருதி போட்டிகளுக்குக்கான இரண்டாவது சுற்று ஸ்பெயின் கால்பந்து கழகங்களின் சொந்த ஆடுகளத்தில் நடக்கவுள்ளது.  

No comments:

Post a Comment

பழமொழி