இன்றைய குறள்

Wednesday, April 24, 2013

bayren munich vs barcelona 2013 [பயிரென் முனிக் vs பார்செலோனா 2013 சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டி]

ஐரோப்பா கால்பந்து கால்பந்து கழகங்களுக்கு இடையே 2013 ஆம் ஆண்டின்  சாம்பியன்ஸ் கோப்பைக்கான முதல் அரையிறுதி போட்டி இன்று தமிழக நேரப்படி நள்ளிரவு 00:15 மணிக்கு துவங்கியது . தொடர்ந்து 6 முறையாக அறையிறுதியினுள் நுழைந்து சாதனை படைத்த ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சலொனா அணியும், சென்ற ஆண்டு இறுதியாட்டத்தில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய ஜெர்மனி நாட்டில் உள்ள பயிரென்  முனிக் கால்பந்து கழங்களும் மோதும் இந்த ஆண்டிற்கான அரையிறுதி போட்டி துவங்கியது.


கடந்த 6 ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையில் பார்செலோனா அணியின் விவரம்.

2008 - அரையிறுதி
2009 - வாகையர் பட்டம்
2010 - அரையிறுதி
2011 - வாகையர் பட்டம்
2012 - அரையிறுதி
2013 - ??? (அரையிறுதி)

எந்த ஒரு ஐரோப்பிய கால்பந்து கழகங்களும் இந்த சாதனையை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி நிச்சயம் ஒரு காரணம் என்று உறுதியாக கூறலாம்.

சென்ற முறை சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தில்  தோற்றதினால் இந்த முறை எப்படியும் வாகையர் பட்டம் சூட வேண்டும் என்ற முனைப்போடு பயிரென் முனிக் இதுவரை விளையாடி வருகிறது. முதல் அரையிறுதி போட்டி சொந்த மண்ணில் நடப்பதால் அவர்களுக்கு தங்கள் ரசிகர்களின் ஆதரவு முழு ஊக்கம் தரும்.


ஆட்டம் துவங்கிய நொடியில் இருந்தே விறுவிறுப்போடு நடைபெற்றது. இரு  அணியினரும் இலக்கு அடிக்கும் முனைப்போடு பந்தை கடத்தி கொண்டு சென்று கொண்டு இருந்தனர். இரண்டு அணியிலும் சிறந்த வீரர்கள் இருந்ததால் யாரும் இலக்கினுள் எளிதாக நுழைய முடியவில்லை.

பயிரென் முனிக் அவர்களுடைய சொந்த ஆடுகளத்தில் விளையாடியதால் அவர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருந்தது. அவர்களுக்கு நிறைய கார்னர்கிக்குகள் கிடைத்தது. பார்செலோனா வீரர்கள் அவர்களுடைய வழக்கமான ஆட்டத்தை விளையாடவில்லை என்பதை விட விளையாட பயிரென் முனிக் வீரர்கள் இடம் கொடுக்கவில்லை என்றே சொல்லவேண்டும். முதல் பாதியில் இரண்டு முறை காப்பாளர் கட்டத்தினுள் பந்தை கையில் தட்ட நேர்ந்தது. ஆனால் பெனால்டி வழங்கப்படவில்லை என்பது ஒரு சங்கதி.

இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் பயிரென் முனிக் வீரர் தாமஸ் முல்லர் தலையால் முட்டி இலக்கினுள் அடித்தார். அப்பொழுது 1-0 என்று பயிரென் முனிக் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் கிடைத்த ஒரே வாய்ப்பை மெஸ்சியால் இலக்கினுள் அடிக்கமுடியவில்லை.

37வது நிமிடத்தில் பயிரென் முனிக் வீரர் கோமஸ் மெஸ்சி மற்றும் 39வது நிமிடத்தில் பார்செலோனா வீரர் மார்டா தவறான ஆட்டத்தினால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

முதல் பாதியில் பயிரென் முனிக்கின் ஆட்டம் அருமையாக இருந்தது. அவர்களே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்களுக்கே அதே கார்னர் கிக்குகள் கிடைத்தது. பார்செலோனா வீரர்களால் பந்தை தங்கள் வசத்தில் வைக்கமுடியவில்லை. அவர்களுடைய நட்ச்சத்திர வீரர் மெஸ்சியிடம் பந்து செல்லாத வகையில் அரண் அமைத்து ஆடினார்கள் பயிரென் முனிக் வீரர்கள்.

 இரண்டாவது பாதி துவங்கி ஐந்து நிமிடங்கள் கழித்து தங்களுக்கு கிடைத்த கார்னர்கிக்கில் பயிரென் முனிக்கின் கோமஸ் ஒரு இலக்கு அடித்தார். இதன் மூலம் 2-0 என்ற இலக்கு கணக்கில் பயிரென் முனிக் முன்னிலை வகித்தது. ஆனால் அவர் இலக்கு அடிக்கும் பொழுது ஆப்சைட் இடத்தில் இருந்தார்.

ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பிரான்க் ரிபரி இலக்கிற்கு வெளியே அடித்தார். ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் பயிரென் முனிக்கின் வீரர் ரோபன் தலையில் முட்டி இலக்கினுள் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் வெளியே சென்றுவிட்டது. மெஸ்சியிடம் பந்து சென்றால் அவரை சுற்றி 3 வீரர்கள் சூழ்ந்து பந்தை அவரிடம் இருந்து தங்கள் வசம் வைத்து கொண்டார்கள்.

ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் ரோபன் மிக நேர்த்தியாக பந்தை வழங்க அதை அடிக்க ரிபரி முயலும் முன் பார்செலோனா காப்பாளார் வால்டேஸ் முன்னால் சறுக்கி வந்து பிடித்தார். பார்செலோனா வீரர்கள் பந்தை தங்கள் வசம் வைத்துக்கொள்ள மிகவும் திணறினார்கள். அவர்களால் பயிரென் முனிக் வீரர்களின் அரணை முறித்து முன்னேற முடியவில்லை.

69வது நிமிடத்தில் பார்செலோனா அணிக்கு கிடைத்த கார்னர்கிக்கில் மார்டா  ஒரு பிரிதியோக முயற்சி எடுக்காமல் சாதாரமாக அடித்ததால் அது காப்பாளரிடம் தஞ்சம் புகுந்தது.

ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் ரோபன் இலக்கு அடித்தார். அவரை தடுக்க முயன்ற ஜோர்டி ஆல்பாவை முள்ளர் ரோபனிடம் செள்ளமுடியாதவாறு தடுத்தார். இதன் மூலம் பயிரென் முனிக் 3-0 என்று முன்னிலை வகித்தது. இது பார்செலோனாவிற்கு மிகப்பெரிய தோல்வியாக கருத்தப்படும்.

ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை மீண்டும் மார்டா தவறவிட்டார். இது மிக மிக அருமையான வாய்ப்பு. 80வது நிமிடத்தில் முள்ளரும்  பார்செலோனா காப்பாளர் மட்டுமே இருந்த நிலைமையில் பந்தை இலக்கினுள் அடிக்க முயன்ற பொழுது அருமையாக தடுத்தார் வால்டாஸ்.

அடுத்த நிமிடத்தில் தனக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பை பயன்படுத்தி மேலும் ஒரு இலக்கு அடித்தார் முள்ளர். இதன் மூலம் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது பயிரென் முனிக். மேலும் ஒரு ஆட்டம் பார்செலோனா ஆடுகளத்தில் இருக்கும் பொழுதிலும்  பயிரென் முனிக் இறுதி செல்வது உறுதியானது போல இருக்கிறது. இந்த தோல்வி பார்செலோனாவிற்கு கடந்த 8 ஆண்டுகளில் கிடைத்த பெரும் தோல்வி என்று கூறலாம். 

அலேசிஸ் சாஞ்சஸ் ரோபனை தடுக்கும் முயற்சியில் செய்த தவறால் அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. ஜோர்டி ஆல்பா முட்டாள்தனமாக வெளியே சென்றிருந்த பந்தை ரோபன் முகத்தில் வீசியதில் அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. சென்ற ஆட்டத்தில் அவர் மஞ்சள் அட்டை வாங்கியதால் அடுத்த ஆட்டத்தில் பயிரென் முனிக்க்கு எதிராக சொந்த மண்ணில் அவரால் விளையாட முடியாது. ஆட்டத்தின் இறுதி நேரத்தில் இனியாஸ்டா செய்த தவறினால் அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.  

பயிரென் முனிக் நிச்சயம் ஒரு சரித்திர வெற்றி பெற்றது என்றே சொல்லவேண்டும். 


No comments:

Post a Comment

பழமொழி