இன்றைய குறள்

Thursday, March 21, 2013

மதிவதனி மதிவதனி மனசுக்குள் ஏனடி மயக்கம் [பாடல் வரிகள்]


படம்: கண் பேசும் வார்த்தைகள்
பாடல்: மதிவதனி மதிவதனி
இசை: சமந்
பாடலாசிரியர்: விவாகா
பாடியவர்:விஜய் பிரகாஷ்





மதிவதனி மதிவதனி
மனசுக்குள் ஏனடி மயக்கம்
குளிர் பதனி பார்வையில
உயிருக்குள் பூ செடி முளைக்கும்
எதுவுமே மறக்குதே
இதயமோ பறக்குதே
எந்தளவும் பழக்கமில்லையே
மனம் இன்னும் மயங்குதே என்னுள் காதல் புலி ஒன்னு நாளும் உருமிடதே
ஏழு கடல் ஏழு மலைகளை தாண்டிட என்னுளே தாகம் எழுகின்றதே
முதுல் முதலாய் முதுகெலும்பு மின்னல் வெட்டும் சாகசக்காரி

மதிவதனி ஏ மதிவதனி
மனசுக்குள் ஏனடி மயக்கம்
குளிர் பதனி பார்வையில
உயிருக்குள் பூ செடி முளைக்கும்

உன்னுடலை தொடும் ஒரு மழை துளி கண்டாலே
என்னக்குளே காச்சல் வந்திடுதே
தமிழினில் உயிர் எழுத்துக்கள் எவை என்று கேட்டாலே
உன் பெயரை உதடும் சொல்லிடுதே
அறுபட்டவால் பல்லிவாலா ஆகிதுடித்தேனே சிலநாளா
அடி பூவே துயர் கேளாய் நடந்தேனே தலைகீழாய்
காதல் என்பது கால்கள் வலிக்க காத்திருந்து வாங்கும் சாபமோ

மதிவதனி ஏ மதிவதனி
மனசுக்குள் ஏனடி மயக்கம்
குளிர் பதனி பார்வையில
உயிருக்குள் பூ செடி முளைக்கும்

விடிவெள்ளி வரும்வரை வாராமலே என்னோடு
உறக்கமும் ஆட்டம் காட்டிடுதே
அவள் முக தரிசனம் பெற தடை இது என்றே தான்
இதயமும் இரவை திட்டிடுதே
நொடிமணியும் அறியாதுன் கடிகாரம் மறந்தேனே தினந்தோறும்
துளி நேரம் தொடும் போதும் உயிர் வாழும் உயிர் வாழும்
பாலை நெருங்கும் பூனை குட்டியாய் என் இதயம் கணக்கு போடுதே

மதிவதனி மதிவதனி
மனசுக்குள் ஏனடி மயக்கம்
குளிர் பதனி பார்வையில
உயிருக்குள் பூ செடி முளைக்கும்
எதுவுமே மறக்குதே
இதயமோ பறக்குதே
எந்தளவும் பழக்கமில்லையே
மனம் இன்னும் மயங்குதே என்னுள் காதல் புலி ஒன்னு நாளும் உருமிடதே
ஏழு கடல் ஏழு மலைகளை தாண்டிட என்னுளே தாகம் எழுகின்றதே
முதுல் முதலாய் முதுகெலும்பு மின்னல் வெட்டும் சாகசக்காரி

மதிவதனி ஏ மதிவதனி
மனசுக்குள் ஏனடி மயக்கம்
குளிர் பதனி பார்வையில
உயிருக்குள் பூ செடி முளைக்கும்

1 comment:

பழமொழி