இன்றைய குறள்

Thursday, March 21, 2013

பேரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய் [பாடல் வரிகள்]


படம்: கண் பேசும் வார்த்தைகள்
பாடல்: பேரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
இசை: சமந்
பாடலாசிரியர்: விவாகா

ஆண்:
பேரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
பெண்:
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே
ஆண்:
பெருங்காற்றிலே மரமாகிறேன்
வேரோடு தான் என் நெஞ்சம் ஆடுதே
பெண்:
தனியாக நான் நொடி நேரமும்
இருந்தால் அது என்னை கொல்லுதே
ஆண்:
ஏன் என்று புரியாத பயம் தோன்றுதே
ஆனாலும் இது கூட இதம் ஆனதே

இருவர்:
பேரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே

ஆண்:
ஒரு நேரத்தில் நீ பல பார்வைகள்
பார்க்கின்ற பழக்கத்தை எங்கே கற்றாய்
பெண்:
சில நேரத்தில் சிலை போலவே
செய்கின்ற கலையை நீ எங்கே பெற்றாய்
ஆண்:
புரியாத பாடல் அதை நெஞ்சமே தினமும் இசைக்கின்றதே
முழுதாகி மாறி மனம் தஞ்சம் கேட்டு தொடர்கிறதே
பெண்:
தொலை தூரம் காணும் தொடும் வானமாய் விழி மயக்கியதே
காலை தொடங்கி மாலை வரையில் காதல் சுட சுட வதைக்குதே

ஆண்:
பேரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே

பெண்:
சில நேரங்களில் நீ விரல் தீண்டுவாய்
என் உயிர் காடு தீ பற்றி எரிகின்றதே
ஆண்:
பொதுவாக நீ ஒரு சொல் சொல்கிறாய்
என் புலன் ஐந்தும் பணியாகி கரைகின்றதே
பெண்:
உனக்காக வாழும் சில நாட்கள் தான் என் வாழ்க்கையடா
உனதாக என்னை உரு மாற்றி போனது காதலடா
ஆண்:
அடையாளம் இல்லா ஓர் ஆசை தான் நெஞ்சை உலுக்கியதே
ஆலை நடுவே போட்ட கரும்பாய் வாழும்வரை மனம் பாடாய்படுத்துதே

இருவர்:
பேரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே

No comments:

Post a Comment

பழமொழி