இன்றைய குறள்

Sunday, March 24, 2013

நறு நறு நறுமுகையே [பாடல் வரிகள்]

படம்: சுண்டாட்டம்
பாடலாசிரியர்: அறிவுமதி
இசை: பிரிட்டோ, எஸ்.என். அருணகிரி
பாடகர்கள்: ஆலாப் ராகு, மதுபாலா

ஆண்:
நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே

நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே
காற்றின் அலை போலே நெஞ்சம் அலைகிறதே
காணும் இடமெல்லாம் காதல் படர்கிறதே

நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே
நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே

ஆண்:
உன் பார்வை ஆயிரம் மொழி சொல்லும் அன்பே அன்பே
உன் இதழ்கள் ஆயிரம் கதை சொல்லும் அன்பே
உன் சின்ன புன்னகை சிறை செய்யும் அன்பே அன்பே
உன் மௌனம் தீயாய் எனை கொள்ளும் அன்பே
ஓஹ் இன்பமாய் இம்சைகள் செய்வாய் அன்பே என் அன்பே
இதயத்தில் மழையென பொழிந்தாய் அன்பே ஹே..ஓஓஓ
காதல் ஒரு வன்முறை தானே அன்பே என் அன்பே
இது கடவுளின் செய்முறை அல்ல அன்பே..

நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே
நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே

பெண்:
உன் கவிதை ஆயிரம் பொய் சொல்லும் அன்பே அன்பே
அது தெரிந்து என் மனம் தலை ஆட்டும் அன்பே
நீ கடந்து போகையில் கரைகின்றேன் அன்பே அன்பே
உனை காணும் நொடி எல்லாம் மலர்கின்றேன் அன்பே
ஓஹ்.. கனவினால் இரவினை தின்றாய் அன்பே என் அன்பே
உன் காதலால் என்னையும் கொன்றாய் அன்பே ஓஓஓ
நியூட்டனின் விதிகளை மீறி அன்பே என் அன்பே
நான் மிதக்கிறேன் பூமிக்கு மேலே அன்பே ஓஹ்..

ஆண்:
நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே
நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே
கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே

No comments:

Post a Comment

பழமொழி