படம்: வத்திக்குச்சி
பாடல்: குறு குறு கண்ணாலே
பாடல் வரிகள்: நா. முத்துக்குமார்
இசை: ஜிப்ரான்
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சிரிக்க தோணுதே
சத்தம் போட்டு குதிக்க தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல் பாட தோணுதே
வெட்கம் இன்றி ஆட தோணுதே
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு
சிறகுகள்...... தந்தாளே
இன்பம் இல்லாமல் துன்பம் இல்லாமல்
நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டி பார்க்கும்
இங்கு இப்போதே வேண்டும் நீ என்று
இந்த இரவென்னை விளையாட்டு காட்டும்
உன் பெயர் கேட்டால்..
என் பெயரை நீ சொல்ல வேண்டும்
ஊரே பார்க்க ..
உன்னோடு நான் செல்ல வேண்டுமே
ஊஞ்சலாய் இடம் வலம்
உள்ளம் ஆடி உன்னை கேட்டுகுமே
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சிரிக்க தோணுதே
சத்தம் போட்டு குதிக்க தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல் பாட தோணுதே
வெட்கம் இன்றி ஆட தோணுதே
ஒன்று இரண்டு என்று கோடி வரை எண்ணி
நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல
காலை பகலென்றும் மாலை இரவென்றும்
கோடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல
பெண்ணே பெண்ணே
பொல்லாத பேய் இந்த காதல்
நீயும் நானும் சேர்ந்தால்தான்
அது விட்டு போகுமே
வேண்டினேன் தினம் தினம்
உந்தல் தோளில் சாய்ந்து போகவே
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சிரிக்க தோணுதே
சத்தம் போட்டு குதிக்க தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல் பாட தோணுதே
வெட்கம் இன்றி ஆட தோணுதே
குறு குறு வரிகள்...
ReplyDelete