உன் நினைவுகளோடு
மட்டுமே பேசுகிறேன்
உன்னை பிரிந்த கணத்திலிருந்து.........
=======================================================
உன்னை காதலித்து
வென்ற
பரிசு குவியல்களில்
நான்
கண்டது
கணக்கில்லா உன் நினைவுகள் மட்டுமே
=======================================================
என்றோ
மாண்டிருப்பேன்
என்னுள் உன்
நினைவுகள் இல்லையெனில்
=======================================================
உன் நினைவுகளை
தாங்குவதால்
என்றுமே எனக்கு
வசந்த காலம்
=======================================================
வங்கிகள் வேண்டாம்
என்
இதயமே போதும்
உன் நினைவுகளை சேமிக்க
ஆனால் வட்டியாக
அதிகமாக
இதயம் கனக்கிறது
=======================================================
நினைவுகளோடு இத்தனை
மகிழ்ச்சியா?
மீண்டும் உன்னை
காதலித்து
தோல்வியுற ஆசைப்படுகிறேன்
சோகத்திலும் சுகம்...
ReplyDeleteஇது தாங்க உண்மை...
நினைவு
ReplyDelete