இன்றைய குறள்

Sunday, February 24, 2013

கனவின் கண்ணாம்பூச்சி





ஒளிப்படமாக ஒளிரவேண்டிய
முகம்
ஏனோ
நிழற்படமாய் கருத்தது.....

பாதை தெரிந்திருந்தும்
இருளினுள்
அடைக்கப்பட்ட வஞ்சம்....

சாதிக்க வேண்டிய கால்களை
முடக்கிவட்டு
சோதனையில் சாதனை ஆசை....

இளம் வயதிலே
புத்தக பையை மறந்து
பட்டறை களன் ஏந்திய
நெஞ்சத்தின் வருத்தம்
கண்களில் சோகமாக.....

சுகமான வாழ்கையை கனவில்
பெற்றுவிட எண்ணி
கண்ணயர்ந்த போது
கனவும்
கண்ணாம்பூச்சி ஆட்டமாடி
கலைத்த சோகம்!

கண்விழித்த பொழெுது
கற்பனையை தொடமுடியாமல்,
கண்கள்
கட்டிப்போட்ட
கதையை எண்ணி
கணத்த இதயத்துடன்
கலைந்த
கனவை எண்ணி
கலங்கி ஏக்கமாக நின்றது........!!!!!!!

No comments:

Post a Comment

பழமொழி