இன்றைய குறள்

Sunday, February 24, 2013

புரட்சி பயணம்


வலுவிழந்த சிறகுகள் என்று
இறுமாப்போடு கட்டி
வைத்த மூடர்கள் முகத்தில்
கருப்பு மை....!
 
அச்சப்படுவேன் என்று
ஆர்ப்பரித்தார்கள்,
துக்கப்படுவேன் என்று
தூற்றினார்கள்,
பதட்டப்படுவேன் என்று
பழித்தார்கள்,
கண்ணீர் விடுவேன் என்று
கணித்தார்கள்,
வருத்தப்படுவேன் என்று
வதைத்தார்கள்,
சிக்கிக்கொள்வேன் என்று
சிரித்தார்கள்,
துயரப்படுவேன் என்று
துதித்தார்கள்.

என்னை நானே முதளீடாக்கினேன்........!
 
உள்ளுக்குள் விதைத்த தீயினால்
உந்தப்பட்டு
உற்சாகமானேன்...

இருளில் பாதை மறைந்த போதிலும்
கண்களின் ஒளிக்கீற்று
வழி நடத்த
பாரத்தை பஞ்சாக
பாவித்து
இலட்சிய பாதையில்
சுதந்திர தாகத்தோடு
துவங்கியது
ஓர் புரட்சி........

 

2 comments:

பழமொழி