இன்றைய குறள்

Sunday, February 24, 2013

வீரத்தின் மைந்தனே


வீரத்தின் மைந்தனே
களம் பல கண்டாயோ நீ!

அச்சப்படாமல் எதிரியின்
முகாமில்
வீரத்தோடு அமர்ந்திருந்தாய்....

சுட்டு வீழ்த்தப்படுவோம் என
அறிந்திருந்தும்
கலங்காமல் அமைதியாய்.....

தந்தை பயிற்றுவித்த
தன்மானத்தை
காக்தாயே இறுதிவரை.....

பயின்ற உறுதியை
எஃகு கோட்டை போல்
பலமான அரணாக்கி
பயமினறி நின்றாயே....

பயந்தோடும் சிசுக்களின்
உள்ளத்தில்,
உக்கிரமான உன்
வீரமுகத்திற்கு
சிம்மாசனம் உண்டு.

அன்னை பூமியை
பிரியும்
ஏக்கம் உன்னுள்.... 

பாலசந்திரனே,
பிறையாக
சுதந்திர வேட்கையோடு
நீ
உயிர் வாழ்ந்தாய்,
முழுமதியாய்
ஒளிரும் முன்னே
உன்னிடம்
பயந்து
உன்னை அழிக்க
திட்டமிட்டனரோ பகைவர்கள்!?

வீரத்திருமகனின்
மகனாய்
நீ
பிறந்தாய்.
பரிசாக தோட்டாக்கள்
உன் உடலில்.....!!!

அமைதியாக உன் உடல்
கிடந்தாலும்,
சுதந்திர காற்றை சுவாசிக்க
உன் ஆன்மா 
ஈழ மண்ணில்
விடுதலை உனர்வோடு....

நீ விதைக்கபபட்ட இடத்தில்
முளைக்கும்
புற்களும்,
சுதந்திர காற்று
சுவாசிக்க நினைக்கும்.

வீர வணக்கங்கள்.........

9 comments:

  1. என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம். :(

    ReplyDelete
  2. இந்த முறை தமிழர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன் தோழரே...

    ReplyDelete
    Replies
    1. நான் அப்படி நினைக்கவில்லை தோழரே, உலக சமூகம் இதை போர்க்குற்றம் என்று நிறுவ முயற்சி செய்கிறது. அப்படி செய்தால் எப்படி தமிழீழம் கிடைக்கும்? நம்முடைய நோக்கம் இனப்படுகொலை என்று அனைவரையும் ஏற்க வைப்பதே. அப்பொழுது தான் தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பை நடத்த முடியும்.

      Delete
    2. முதலில் போர் குற்றம் அம்பலமாகட்டும் பிறகு இனஅழிப்பை பற்றி பேசுவோம்... எதையுமே ஐ.நா ஏற்கவில்லையே.. முதலில் ஏற்கட்டும்... பிறகு எல்லாம் தானாக நடக்கும்.... ஏற்கனவே நான்கு ஆண்டுகள் முடிய போகிறது.... :(

      Delete
  3. ஈழம் இருக்கும் திசை நோக்கி இருகரம் கூப்பி வணங்கிடுங்கள்.
    நம் இறைவன் இருக்கும் இடம் இதுவென்று.

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொன்னீர்கள் தோழரே....

      Delete
  4. Kannerai varavazhaikkum un mugam,,,,pinju nenjai thulakkai thottakkalukku eppadi manam vanthatho?

    ReplyDelete
    Replies
    1. அது இனவெறி பிடித்த சிங்கள இராணுவத்தினரிடம் தான் கேட்க வேண்டும்

      Delete
  5. அருமையான இறுதி வரிகள்

    ReplyDelete

பழமொழி