இன்றைய குறள்

Saturday, February 9, 2013

பசியில் அயர்ந்த கண்கள்




காலம் விட்டுச்சென்ற
எச்சத்தின் மிச்சங்கள்,
ஆதரவின்றி சாலைகளில்.......

எழுதுவற்கு முன்னே
கசக்கப்பட்டு குப்பையில்
வீசப்பட்ட புது தாள்கள்.......

வறுமையென்னும் சிக்கலை
அவிழ்க முடியாத
நாகரீக வளர்ச்சி.......

நாட்டின் வளர்ச்சியை
துகிலுறித்து வீசியெறிந்து
கறுப்பு மை பூசுகிறது.......

பெற்ற உள்ளங்களின்
கதவுகள் மூடப்பட்டதினால்
உலக கதவை திறந்த
பிஞ்சு விரல்கள்.......

எங்கோ பிறந்த போதிலும்,
தேடிய விழிகளும் தவழ்ந்த கால்களும்
அளித்த பரிசு
அருகில்
இணைந்த நட்பு......

2 comments:

பழமொழி