2012ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரராக அர்ஜென்டினா நாட்டின் மெஸ்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பார்செலோனா கால்பந்து கழகத்திலும் விளையாடுகிறார்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக இவரே இப்பட்டதிற்கு சொந்தகாரர் ஆகிறார். இது ஒரு சாதனையாகும். இதுவரை யாருமே நான்கு முறை இப்பட்டத்தை வெல்லவில்லை.
இந்த விருது இவருக்கு கொடுக்கப்பட்ட காரணம் ஒரே ஆண்டில் அதிக இலக்குகள்(91 goals) அடித்ததே காரணம். மேலும் அவர் சார்ந்துள்ள பார்சலோனா கால்பந்து கழகம் சிறப்புற விளங்குவதற்கு இவர் ஒரு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்.
இந்த முறை அவர் விளையாடும் பார்செலோனா அணியில் விளையாடும் சக வீரர் இனியாஸ்டா (ஸ்பெயின் நாட்டு வீரர்) மற்றும் ரியல் மாட்ரிட் அணியில் விளையாடும் ரொனால்டோவோடு (போர்ச்சுகல் நாட்டு வீரர்) இறுதி சுற்றில் போட்டியிட்டு இந்த பட்டத்தை வென்றுள்ளார்.
வாழ்த்துக்கள் மெஸ்சி..
இன்னமும் அவர் உலக கோப்பை மட்டும் வெல்லவில்லை. அதையும் வென்றுவிட்டால் அவர் வாழ்வில் அனைத்து சாந்தைகளையும் கால்பந்தில் செய்துவிட்டார் என்று நிச்சயமாக சொல்லிவிடலாம்.
nalla thakaval...
ReplyDelete