தாய் தந்தை எனக்களித்த
மாபெரும் சொத்து நீ.
அசையா சொத்துக்களை விட
உயிருள்ள நீ நன்முத்து.
கலங்காதே என் உடன்பிறப்பே,
குப்பையில் வீசி விடமாட்டேன்.
நானிருக்கும் வரை உனக்கு
ஏன் வருத்தம்.
கண்ணீர் துளிகளும்
அச்சப்படும்
உன்னை அன்டுவதற்கு.
நீ பதிக்கும்
கால்தடங்களுக்கு
நானே வழிகாட்டியாக
இருப்பேன்.
ரத்தத்தின் ரத்தமே கவலை வேண்டாம்,
என் ரத்தம் இருக்கும் வரை
உன் ரத்தம் உரையாமல்
காப்பேன்.
===================================================
பெற்றெடுக்கும்
பிள்ளைகளுக்காகவும்
என்றென்றும் நான்.
===================================================
இறப்பேன் நான்
நீ
இரந்து வாழ நினைத்தால்.......
கொடுப்பேன் அனைத்தும்
நீ
மகிழ்ச்சியுடன் உயிர் வாழ.....
உனக்காக மட்டுமில்லை
நீ
என்றென்றும் நான்.
என் ரத்தம் இருக்கும் வரை
ReplyDeleteஉன் ரத்தம் உரையாமல் காப்பேன்.
arumayaana varigal thozhare.
kangal panikkinrana. mikka arumai
ReplyDeleteஇந்த படத்தினை பகிரும்போது படமாக பார்த்தேன்...
ReplyDeleteஇப்பொது பாசத்தின் வரிகளாக உங்கள் கவிதை மூலம் பார்கிறேன்... மிக்க நன்றி அண்ணா..!!!
இந்த படத்தினை பகிரும்போது படமாக பார்த்தேன்...
ReplyDeleteஇப்பொது பாசத்தின் வரிகளாக உங்கள் கவிதை மூலம் பார்கிறேன்... மிக்க நன்றி அண்ணா..!!!
nice
ReplyDelete