புதுமையாக நீ இருப்பாய்
என்று நம்பி
புத்தாண்டு என்கிறோம்,
நித்தமும் 24 மணி நேரம்
என்பதை
மறந்துவிட்டு......!
ஒவ்வொரு வருடமும்
பிறக்க தான் செய்கிறது
இந்த ஆண்டாவது
சிறப்பாக எதுவும் நடக்காதா
என்று
ஏங்கும் முதிர் கன்னிகள்
ஆசையோடு பார்த்திருக்கின்றார்கள்
வரதட்சணை ஒழிய...!
கடந்த ஆண்டுகள்
பரிசாய் தந்து சென்ற
இருள் அரக்கனை
மீட்கும் இரட்சகனாய்
தமிழகம்
எதிர்பார்க்கிறது...!
அணு அலைகளை
வாரி இறைத்து,
தமிழர்களுக்கு
உலை வைக்கும்
அணு உலைகளை
மூடி மகிழ்விப்பாய்
என்று நம்புகிறோம்
காடுகள் அழிகிறது... விளை நிலங்கள் கருகிறது... ஆறுகள் காய்கிறது... ஏறிகள் வற்றுகிறது...
2013னே
பழைய பஞ்சாங்க ஆண்டுகளாய்
இல்லாமல்
ஒளியூட்டும்
நல்லாண்டாய் மலர்ந்து
எங்கள்
வாழ்வை உயர்த்த
உன்னை
பாசத்தோடு வரவேற்கிறோம்
புத்தாண்டே வருக,
புது உலகம் தருக............
No comments:
Post a Comment