இன்றைய குறள்

Wednesday, December 19, 2012

இச்சையின் எச்சம்






இச்சையின்
எச்சத்துளிகளின்
மிச்சம் இது

இது போல் எத்தனையோ
மிச்சங்கள்!
மிச்சங்கள் மலைகளாகவும் இருக்கிறது.

மலைகளோடு மலையாக
அசையாமல் நிற்காமல்
பூமாலையாக மாறிய மாயம் இது.

ஒவ்வொரு அசைவும் விந்தை தான்.

குப்பையில் கிடைத்த
வைரமோ?
உடலில் மட்டுமில்லை
உள்ளத்திலும்
இத்தனை உறுதியாக இருக்கிறதே!!

கலங்கி போன கண்களை
இதயக்கரம் கொண்டு
துடைத்து,
அன்றாட வாழ்க்கை
போராட்டத்தில்,
இரந்து வாழ்ந்து
இறக்காமல்,
உழைத்து வாழ்ந்து
சாதிக்க துடிக்கிறது........!

தவழ்ந்து விளையாட வேண்டிய
கால்கள் உழைப்பால்
உறுதியான மாயம் என்ன!

மாயத்தில்
மாயமாகி
மாண்டு போகாமல்
மாலையாகி
மணம் வீசுகிறது......!

4 comments:

  1. ival vilaiyada piranthavel alle.... kurinji malar navalil pootthe purani pole ivalum ulagai aale vanthavel......

    ReplyDelete
  2. மீண்டும் ஒரு பூரணி கதாபாத்திரமா ? சிறப்பு.

    ReplyDelete

பழமொழி