இன்றைய குறள்

Thursday, December 20, 2012

14 வயது தமிழ் மாணவனின் துணிச்சல்




லண்டனில் சிங்கக் கொடியை பள்ளிக்கூடத்தில் இருந்து அகற்றிய 14 வயது மாணவன் !

லண்டனில் பல தமிழர்கள் கொல்லப்பட்ட மக்களுக்காக போராடி வருகின்றனர். இதேவேளை லண்டனில் போராடினால் எமக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது ? வெள்ளைக்காரனிடம் எமது போராட்டத்தை கொண்டு சேன்று சேர்க்க முடியாது என்று எல்லாம் பேசிவரும் சிலரும் இங்கு தான் இருக்கிறார்கள். லண்டனில் நாம் போராட்டம் நடத்தினால் வெள்ளைக்காரர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுபவர்களும் லண்டனில் தான் இருக்கிறார்கள். ஆனால் லண்டன் மிச்சம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், இவ்வாறு பேசித் திரியும் நபர்கள் சிலருக்கு விழுந்த சாட்டையடியாக உள்ளது. ஒரு 14 வடதுச் தமிழ்ச் சிறுவனின், மனத் துணிச்சல் இது ! எவ்வாறு இளைய தலைமுறையினர் தமது தேசத்தின் மேல் பற்றுதலாக உள்ளார்கள் என்பதும் இதில் இருந்து தெரிகிறது. கூடுதலாக சஸ்பென்ஸ் போடாமல் விடையத்துக்குச் செல்லலாம் வாருங்கள்.
லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள முன்னணிப் பாடசாலை நிகழ்வு அரங்கு ஒன்றில் பல நாட்டுக் கொடிகள் வைக்கப்பட்டுள்ளது. பல உலக நாடுகளின் கொடிகளுக்கு மத்தியில் இலங்கையின் சிங்கக் கொடியும் இங்கே வைக்கப்பட்டிருந்ததை அங்கே கல்வி பயிலும் தமிழ் மாணவன் ஒருவன் ஆட்சேபித்துள்ளான். தாம் இதனை ஏன் ஆட்சேபிப்பதாக ஒரு பெரும் கடிதத்தை எழுதிய இச் சிறுவன், இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை விவரித்துள்ளான். இத்தோடு புகைப்படங்களையும் இணைத்து தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளான். இவற்றைப் பார்வையிட்ட தலைமை ஆசிரியர், மிகவும் மன வேதனையடைந்து, அங்கிருந்த இலங்கைக் கொடியை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். இக் கொடியைப் பார்க்கும் போது தமிழ் சிறுவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனையும், வேதனையடைகிறார்கள் என்பதனையும் தாம் புரிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் கருதி, இச் சிறுவனின் பெயரையும், அவன் பயிலும் பள்ளிக்கூடத்தின் பெயரையும் நாம் இங்கே வெளியிடவில்லை. இதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு ஏன் ஏனைய தமிழ் இளையோர்கள் இவ்வாறு கொடிப் புறக்கணிப்பில் ஏன் ஈடுபடக் கூடாது ? சமீபத்தில் ரூட்டிங்கில் உள்ள பாடசாலை ஒன்றில் நவம்பர் மாதம் 27ம் திகதி காலை, அசம்பிளி நடந்தவேளை, அன்றைய தினம் அதனை முன் நின்று நடத்திய தமிழ் சிறுவன் ஒருவர், கொல்லப்பட்ட தமிழ் மக்களின் அஞ்சலி நிகழ்வு இன்று, அவர்களுக்காகவும் நாம் 1 நிமிடம் மெளனமாக நிற்ப்போம் என்று கூறியுள்ளார். அப் பள்ளி மாணவர்கள் அனைவரும் அன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். இலங்கையை விட்டு பல்லாயிரக் கணக்கான மைல் தொலைவில் நாம் வாழ்ந்தாலும் தமிழர் என்ற உணர்வு எம்மை விட்டுப் பிரியப்போவது இல்லை. அதிலும் இளையோர்கள் இப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்து வழி நடத்தவேண்டும். இதற்கு பெற்றோர்கள் தடைசொல்லாது இருக்கவேண்டும். புலம்பெயர் நாடுகளில், இளையோர்கள் பாதைமாறிச் செல்ல, மேற்கத்தைய பாணியில் அவர்கள் வளர்க்கப்படுவதே காரணமாக அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் கோவில், ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலையம், சனிக்கிழமை தமிழ் பள்ளிக்கூடம், என்று சென்று வரும் இளையோர்கள், பெரும்பாலும் நல்ல வழியில் நடத்தப்பட்டு வருவதாககவும், அவர்கள் தமிழ் கலாச்சாரங்களோடு இணைந்திருப்பதால், பிற கலாச்சாரப் பழக்கங்களை பின்பற்றுவது இல்லை என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அவர்களின் ஈடுபாடு பிழையான வழியில் செல்லாமல் இருக்கிறது. இதுவே ஈழத் தமிழர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க எதிர்காலத்தில் உதவியாக அமையும்

No comments:

Post a Comment

பழமொழி