இன்றைய குறள்

Sunday, December 16, 2012

பொத்தல் வானம்


பொத்தலான மேகத்தை
அடைக்கமுடியவில்லை
அதனால்
நான்
குடையினுள் தஞ்சம்......

===========================

மறைந்து போனாயா?
பயந்து ஒளிந்தாயா?
என்னை பார்ப்பாயா?
திரும்பி வருவாயா?

என்று கண்ணில்
ஒரு தேடலுடன்

மழையில் மறைந்த
நாய் குட்டிக்காக,
குடைக்குள்....
இந்த சின்ன குட்டி!!!!!

===========================

குடை எடுத்து
நீ தவழ்ந்து வர,
மழைத்துளிகளை தூது
விடுத்து
உன்னை பார்த்து
மகிழ்கிறது
மேகம்.

ஆகா எத்தனை  அழகு!!!!! 
மழையிலும் இந்த  மழலையின்
தவழ்தல்

===========================

தன்
பிஞ்சி விரல்களால்
தீட்டிய
வர்ண கோலம்
அழிந்துவிடகூடாது
என்றெண்ணி
குடை பிடித்து
காப்பதாய்
மகிழ்ச்சி முகம்
தற்பொழுது
சோகத்தில்




உருண்டோடும் தண்ணீரில், கோலம் 
கரைந்தோடும் பொழுது :( :( :(

==========================

4 comments:

  1. சூழல் அப்படியே கண்ணுக்குள்
    வந்து போனது
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக அழகா சொல்லிருக்கிங்க. அருமை.

    ReplyDelete

பழமொழி