மயில் தோகையில்
இருக்கும்,
கண்ணும்
நீ விழி திறவாய்
என்று காத்திருக்கிறது
========================
உன் கரிய விழி
தன்னிலும் அழகா
என்று
நீல கண்ணோடு
விசித்திரமாக
காத்திருக்கிறது
மயில் தோகை...............!
========================
நீ விழி திறந்தால்
தன்னை விட
உன் கண்
அழகாய் இருக்கும்
என்ற
எண்ணத்தோடு
தன் தோகையை
தூது அனுப்புகிறதோ
மயில்,
நீ விழி திறவாதே
என்று..................!
=========================
உன் குரல்
இடி ஓசையோ
ஆடிய மயில்
இறகு
உதிரிந்துள்ளது
உன் மேல்!
=========================
மயிலுக்கும் உன் மேல்
காதலோ!
என்னை போலவே
உன் விழி
கதவு
திறக்க
காத்திருக்கிறது.......!
No comments:
Post a Comment