இன்றைய குறள்

Monday, December 10, 2012

கால்பந்து வீரர் மெஸ்சியின் உலக சாதனை

மெஸ்சி உலகசாதனை.

இது வரை அவர் எடுத்திருந்த 84 கோள்களின் புள்ளி விவரங்கள்:-


கால்பந்து வீரர் மெஸ்சி உலகசாதனை புரிந்துள்ளார். ஒரே ஆண்டில் 86 கோல்கள் அடித்து அவர் இந்த சாதனை புரிந்தார். இதற்கு முன்னால் மேற்கு ஜெர்மனி மற்றும் பெயரென் முனிச் கால்பந்து கழக வீரர் முல்லர் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 85 கோல்கள் அடித்தது உலக சாதனையாக இருந்தது.

மெஸ்சி அர்ஜென்டினா நாட்டை சார்ந்த இவர் 13வது வயதி ஸ்பெயினில் உள்ள பார்சலோன கால் பந்து கழகத்தில் சேர்ந்தார். அவருடைய நேர்த்தியான விளையாட்டின் மூலம் பார்செலோனா அணியில் முக்கிய வீரர் அந்தஸ்த்தை அடைந்தார். மேலும் அர்ஜென்டினாவின் தேசிய அணிக்கு தலைவராகவும் வகிக்கிறார்.

இவர் ஒரே ஆண்டில் தென்அமெரிக்கா வீரர் பீலே அடித்த 75 கோல்களை சமீபத்தில் தகர்த்தார். அதன் மூலம் அதிக கோல்கள் அடித்த தென்அமெரிக்க வீரர் என்ற சாதனை புரிந்தார். மேலும் ஜெர்ட் முல்லர் அடித்திருந்த 86 கோல்களை தகர்ப்பார் என்றும் கூறப்பட்டுகொண்டே இருந்தது.

இது வரை 84 கோல்கள் அடித்திருந்த மெஸ்சி, 9-டிசம்பர்-2012 ரியல் பெட்டிஸ் என்ற கால்பந்து கழகத்திற்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 16வது நிமிடத்தில் தனது 85 கோல்கள் அடித்து சமன் செய்தார். மீண்டும் 25வது நிமிடத்தில் 86வது கோல் அடித்து அச்சாதனையை முறியடித்து, புதிய சாதனை புரிந்தார்.


இந்த ஆண்டில் பார்சலோன கழகத்திற்கு மேலும் 3 ஆட்டங்கள் இருப்பதால் மேலும் நிறைய கோல்களை அவர் அடிக்ககூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது வரை மூன்று முறை உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் என்ற பட்டம் பெற்ற இவர், இச்சாதனை மூலம் 2012ற்கான சிறந்த வீரர் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும் கூறலாம்.


இதை முறியடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ!!!!?!?!??!




No comments:

Post a Comment

பழமொழி