இன்றைய குறள்

Saturday, December 8, 2012

தளராத மனம் படித்தது

இராமேஸ்வரம் செல்லுகையில், இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் அந்தப் பாட்டியைப் பார்த்தேன். பனை ஓலை விசிறி, பனை ஓலை கிலுகிலுப்பை வேண்டுமா என்று ஒவ்வொரு இரயில் பெட்டியாகத் தேடித் தேடி விற்றுக்கொண்டிருந்தாள்.

சிரித்த முகத்தோடு, பொறுமையாக, குறைந்த விலையில் கலைநயம் மிக்க பொருட்களை விற்று, வாழும் அந்தப் பாட்டி என்னைப் பெரிதும் கவர்ந்தாள். அந்தப் பாட்டியிடம் ஒரு படம் எடுக்கலாமா என்று கேட்டதும் வெட்கம் வந்துவிட்டது. இரண்டு விசிறி பத்து ரூபாய், இரண்டு கிலுகிலுப்பை பத்து ரூபாய்! கிலுகிலுப்பை வைத்து விளையாடும் வயதில் வீட்டில் யாரும் இல்லாதிருந்தபோதும், நாங்கள் கிலுகிலுப்பைகள், விசிறிகள் வாங்கினோம்.

இந்தத் தள்ளாத வயதிலும் உழைத்து உண்ண வேண்டும். வேறு யாரையும் சார்ந்து வாழக் கூடாது என்றிருக்கும் அந்தப் பாட்டியை நாம் அனைவருமே, குறிப்பாக, நம் இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ளலாம்...!


-இன்று ஒரு தகவல் [படித்தது நன்றி செம்மொழி]



என் மனதின் வெளிப்பாடு கீழே. நீங்களும் உங்கள் எண்ணங்களை பதியுங்கள்

ஏழ்மையில் உழைப்பு,
முதுமையில் முயற்சி,
வறுமையில் வாடாமுகம்.
உழைப்பின் அருமை
அறிந்த செயல், தள்ளாடும் வயதிலும்,
தளராத மனம்
கொண்ட
உங்களுக்கு
பணிவான
வணக்கங்கள் தமிழ்த்தாயே

1 comment:

  1. நாங்கள் உ ருவாக்கிய உயிருள்ள பிள்ளைகள்
    எங்களின் சிரிப்பை பறித்து கொண்டாலும்
    உழைப்பில் உருவான இந்த பிள்ளைகள் (பனை )
    எங்களை எப்போதும் மகிழ்ச்சி என்னும் வானில்
    சிறகடிக்க வைக்கும்!! அந்த நம்பிக்கையில் தான்
    வாழ்கை ஓட்டத்தை ரயிலின் ஓட்டத்தோடு
    கழித்துக் கொண்டிருக்கிறோம் !!!

    ReplyDelete

பழமொழி