பூக்கள் பிரிந்தன
நம் உள்ளங்கள் இணைந்ததடி,
உன் உதடுகள்
சொல்ல நினைக்கும் வார்த்தைகளை
என் மனம்
புரிந்து கொள்கிறதடி.
இது தான் காதலா!?
மனதிற்கும் புத்திக்கும்
இடையே
போட்டி துவங்கியது.
மனதில் நீ இருந்ததால்
வென்றது மனமே,
தோற்றது புத்தி.
புத்தியின் சிந்தனையை
மனதில் உள்ள
உன்னால் வென்றேன்.
இப்பொழுது
நாம்
வெற்றிபெற வேண்டும்
என்று
புத்தி எண்ணுகிறது.........
No comments:
Post a Comment