தனியாக தவிக்கும் பொழுது
வேண்டாம் என்று புறந்தள்ளிய
கருவறை மீதுள்ள கோபம்,
அழுது ஓய்ந்த கண்களில்
வற்றாத கண்ணீர் ஊற்றிலிருந்து
கன்னத்தில் வழியும்
காயாத ஈரத்தின்
சாட்சி.
நிறங்கள் உடலுக்கு தான்
உள்ளத்திற்கு இல்லை.
நன்மக்களின் காதல்
மனிதம் மீது உள்ள வரை,
மனிதம் மாண்டுவிடாது.
கவலை வேண்டாம் கண்ணே.
கரை சேர்க்கும் உன்னை,
தாயையும் தாண்டிய
இம்மகளின் பாசம்.
உன் சோகத்திற்கு முற்றுப்புள்ளியாய்
உன்னை அணைத்த கரங்கள் இருக்கிறது.
வயிற்று பசியாற்ற உணவுகள் இருந்தாலும்
அன்பின் ஏக்கத்தை போக்கிய
தோள்கள் என்றுமே சிறந்தது.
பிராத்தனை வேண்டாம்,
அன்பே கடவுள் என்று
போதிக்கும் உள்ளம்
இருக்கும் பொழுது
இனி மகிழ்ச்சி தான்.
முடிவிலும் சிறப்பான வரிகள்...
ReplyDeletearumai anna
ReplyDelete