இன்று ஒரு சிந்தனை. தமிழ் திரைப்படத்தில் வெளியாகும் பாடல்களை பற்றி. அவைகளில் எளிதான வார்த்தைகளோடு நம் தமிழ் இசை கருவிகளை பயன்படுத்தி பாடல் இருந்தால், அதற்கு பெயர் ஐட்டம் சாங், குத்து பாட்டு, காணா பாட்டு மற்றும் நாட்டுப்புற பாட்டு என்று முத்திரை குத்து ஒதுக்கும் நிலையுள்ளது. எளிதான வார்த்தைகளை கோர்த்தால் அவை ஒதுக்கப்படவேண்டுமா!!!?
ஆனால் இந்த மாதிரி பாடல்கள் தான் அனைத்து தட்டு மக்களையும் சென்று அடையும். ஏன்னென்றால் அப்பாடல்களில் உள்ள வரிகள் மிக மிக எளிமையான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதப்பட்டு இருக்கும்.
ஆக்ஸ்போர்ட் பலகலைகழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள் அதில் உலகில் உள்ள மொழிகளில் அதிக வார்த்தைகள் கொண்ட மொழி அகர மொழி (தமிழ் மொழி) என்று கூறியுள்ளார்கள். அப்படிப்பட்ட மொழியில் வார்த்தைகளுக்கு என்ன பஞ்சம்!!?!
ஒன்றும் இல்லை நாம் பிறரிடம் பேசுகிறோம் இல்லையா? அப்படி பேசும் பொழுது அது எந்த வகை என்று சொல்வதில் நம் மொழியை தவிர வேறு எந்த மொழியும் சொல்லிவிட முடியாது என்று உறுதியாக சொல்ல முடியும். இங்கே சொடுக்கி பாருங்கள். உங்களுக்கே புரியும்
நம்முடைய கிராமிய பாடல்கள் சொல்லாததா வேறு பாடல்கள் சொல்ல போகிறது. உதாரணம் காதல், வெற்றி, இயற்கை, சோகம், தோல்வி என்று இப்படி நிறைய தலைப்புகளுக்கு நம்மிடத்தில் பாட்கள் இருக்கிறது. அப்படி ஒரு முயற்சி தான் இது. இது என்னுடைய முதல் முயற்சி. நான் எழுதிய வரிகள்.
கண்டேனடி கனவு கனவு
ராத்திரியில் உன்னோட நினைவு
நான் கண்டேனடி கனவு கனவு
ராத்திரியில் உன்னோட நினைவு
போறேன் நானும் தூரம் கடந்து
போறேன் நானும் தூரம் கடந்து
வாயேன் நீயும் மன கதவை திறந்து
கண்டேனடி கனவு கனவு
ராத்திரியில் உன்னோட நினைவு
போறேன் நானும் தூரம் கடந்து
வாயேன் நீயும் மன கதவை திறந்து
நான் கண்டேனடி கனவு கனவு
ஓடும் ஆத்துல தண்ணி இல்லை
கண்களும் காஞ்சி போச்சி
ஓடும் ஆத்துல தண்ணி இல்லை
என் கண்களும் காஞ்சி போச்சி
விளையாடும் மரம் தடுத்தது என்னை
விளையாடும் மரம் தடுத்தது என்னை
கேட்காம ஓடுது கால்
கேட்காம ஓடுது கால்
கண்டேனடி கனவு கனவு
ராத்திரியில் உன்னோட நினைவு
போறேன் நானும் தூரம் கடந்து
வாயேன் நீயும் மன கதவை திறந்து
நான் கண்டேனடி கனவு கனவு
சொந்த பந்தம் எல்லாம் மறந்து
போகிறேன் நான் உலகை துறந்து
என் சொந்த பந்தம் எல்லாம் மறந்து
போகிறேன் நான் உலகை துறந்து
உன் நினைவே மட்டும் துணையாகவே
உன் நினைவே மட்டும் துணையாகவே
பிரிகிறேன் நான் உலகைவிட்டு
பிரிகிறேன் நான் உலகைவிட்டு
பிரிகிறேன் நான் உலகைவிட்டு
நான் கண்டேனடி கனவு கனவு
ராத்திரியில் உன்னோட நினைவு
போறேன் நானும் தூரம் கடந்து
போறேன் நானும் தூரம் கடந்து
வாயேன் நீயும் மன கதவை திறந்து
வாயேன் நீயும் மன கதவை திறந்து
அருமை வரிகள் நண்பரே... இணைப்பிலும் படித்தேன்... அருமை...
ReplyDeleteநன்றி...