கோர தாண்டவமாடிய காலத்தின் கோலம்,
அதில் பயங்கரமாய் நடந்தேறிய அவலம்.
எல்லோர் மனதிலும் சோகத்தின் உச்சம்,
உலக தமிழர் நெஞ்சத்தின் கலக்கம்
கொக்கரிக்கும் பகைவர் கூட்டம்,
உச்சத்தில் அதன் தாக்கம்,
எங்கெங்கும் அறவழி போராட்டம்.
சிலரோடு உண்மையை உரைக்க தர்க்கம்,
என்றும் தீராது நம்முடைய தாகம்,
அதுவே தமிழீழத்தின் சுதந்திரம்.
மாவீரர் நாளில்
தாய் பூமியின்
விடுதலைக்காக
போராடி
தன்னுயிரை
சுதந்திரத்திற்காகவும்,
தன்னுடலை
தனக்கு பிடித்த
மண்ணோடும்,
விதைத்து விட்ட
வீரர்களுக்கு வீரவணக்கம்............
தமிழர்களின் தாகம் சுதந்திர தமிழீழம்
சிறப்பு கவிதைக்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete