இன்றைய குறள்

Tuesday, November 27, 2012

செங்காடே சிறுகரடே போய்வரவா பாடல் வரிகள்

படம்: பரதேசி 
இயக்குனர்: பாலா 
பாடல்: செங்காடே சிறுகரடே  போய்வரவா 
பாடல் வரிகள்: கவிப்பேரரசு வைரமுத்து 
இசை: ஜி.வி. பிரகாஷ்
பாடியவர்: வி.வி. பிரசன்னா 




ஓ செங்காடே சிறுகரடே போய்வரவா
ஓ காடுகளே கள்ளிகளே போய்வரவா

சுடுசுடு காடு விட்டு,
போகிற பொணங்க போல 
சனசன சனங்களெல்லாம், 
போகுது பாதை மேல

உள்ளூரில் காக்கா குருவி இற தேடுதே ஓ 
பசியோடு மனுசக்கூட்டம் வெளியேறுதே

பொத்தக் கள்ளியும் முள்ளுத் தச்சதும் 
பொத்து ஒழுகுமே பாலு 
காலங்காலமா அழுது தீத்துட்டோம் 
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்குக் காலைப்போல் 
வத்திப்போச்சய்யா வாழ்வு
கூட்டம் கூட்டமா வாழப்போகிறோம் 
கூட வருகுதே சாவு

ஓ செங்காடே சிறுகரடே போய்வரவா
ஓ காடுகளே கள்ளிகளே போய்வரவா

வெளையாத காட்டவிட்டு
வெளையாண்ட வீட்டவிட்டு 
வெள்ளந்தியா வெகுளிச்சனம் 
வெளியேறுதே.. ஓ...
வாழ்வோடு கொண்டு விடுமோ 
சாவோடு கொண்டு விடுமோ 
போகும் தெசை சொல்லாமலே 
வழி நீளுதே
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஓ
வயிறோடு வாழ்வது தானே பெருந்துன்பமே 
பொல்லாத விதியும் அழைக்கப் 
போறோமே பஞ்சம் பொழைக்க 
யார் மீள்வதோ
யார் வாழ்வதோ
யார் கண்டது?

பாலம் பாலமா வெடிச்சுக்கெடக்குதே 
பாடுபட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் பொதைக்கப் பாக்குதே 
கேடு கெட்டவன் சாமி
புளியங்கொட்டைய அவிச்சுத் திண்ணுதான் 
பொழச்சுக் கெடக்குது மேனி 
பஞ்சம் பொழைக்கவும் பசியத்தீக்கவும் 
பச்ச பூமியக் காமி

ஓ செங்காடே சிறுகரடே போய்வரவா
ஓ காடுகளே கள்ளிகளே போய்வரவா 

காலோடு சரள கிழிக்க 
கண்ணோடு புழுதி அடிக்க 
ஊர் தாண்டியே ஊர் தேடியே 
ஊர் போகுதே
கருவேலங்காடு கடந்து 
கல்லூத்து மேடு கடந்து 
ஊர்சேரலாம் உசுர் சேருமா 
வழியில்லையே..
கங்காணி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக்கொண்டு நரிபோகுதே
உடல் மட்டும் முதலீடாக 
ஒரு நூறு சனம் போறாக 
உயிர் மீளுமோ
உடல் மீளுமோ
யார் கண்டது?

பொத்தக் கள்ளியும் முள்ளுத் தச்சதும் 
பொத்து ஒழுகுமே பாலு 
காலங்காலமா அழுது தீத்துட்டோம் 
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு காலைப்போல் 
வத்திப்போச்சய்யா வாழ்வு 
கூட்டம் கூட்டமா வாழப்போகிறோம் 
கூட வருகுதே சாவு! 

ஓ செங்காடே சிறுகரடே போய்வரவா
ஓ காடுகளே கள்ளிகளே போய்வரவா

சுடுசுடு காடு விட்டு
போகிற பொணங்க போல 
சனசன சனங்களெல்லாம் 
போகுது பாதை மேல
உள்ளூரில் காக்கா குருவி 
இற தேடுதே... ஓ
பசியோடு மனுசக்கூட்டம் 
வெளியேறுதே..!

பொத்தக் கள்ளியும் முள்ளுத் தச்சதும் 
பொத்து ஒழுகுமே பாலு 
காலங்காலமா அழுது தீத்துட்டோம் 
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு காலைப்போல் 
வத்திப்போச்சய்யா வாழ்வு
கூட்டம் கூட்டமா வாழப்போகிறோம் 
கூட வருகுதே சாவு

1 comment:

  1. நல்ல வரிகள்... படத்தில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்...

    நன்றி...

    ReplyDelete

பழமொழி