மறந்துவிட்டாள்
மங்கை. அவளை
மறக்க
மறுக்கும்
மனது. அவளுருவம்
மறையவில்லை. நானும்
மறக்கவில்லை.
மறைக்கவும் முடியவில்லை. என் செய்வேன்
மருந்து அளிக்க யாரும் இல்லை, இதயமும்
மறத்து போகவில்லை. கண்ணை
மறைத்த காதல்
மயக்கம்
மட்டும்
மனதினுள்
மங்காமல்
மலை போன்ற நினைவுகளை சுமந்துபடி.
மறைந்து வாழ எண்ணமில்லை
மரணிக்க எண்ணம் உதிக்கிறதே, என்செய்வேன்........?!!!!!!!!!
arumai
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteஇயல்பாக அமர்ந்த "ம"
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
அனைத்து வரிகளும் அருமை.
ReplyDeleteகுறிப்பாக....
//மறைந்து வாழ எண்ணமில்லை
மரணிக்க எண்ணம் உதிக்கிறதே//