"பிஞ்சில் பழுப்பது பழம் இல்லை. வெம்பிப்போனது என்று அர்த்தம்"
இது என்ன இந்த ஆளு பாடகி சின்மையிக்கு கடிதம் எழுதுகிறான் என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
என்னுடைய ஆதங்கத்தை வெளிபடுத்தவே இந்த முயற்சி.
நான் இதை பதிப்பதால் எனக்கு ஒன்றும் நேரப்போவதில்லை, வேண்டுமானால் என்னுடைய நண்பர்கள் அல்லது சமூக வலைத்தளத்தில்
நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்களிடமிருந்து இருந்து சில கருத்துக்கள் வரலாம்.
பாடகி சின்மயி அவர்களுக்கு,
ஆனால் பாடகி சின்மயி அம்மையார் அவர்களே, நீங்கள் அப்படி இல்லை. பத்து கோடி தமிழர்களில் குறைந்தது பாதி பேருக்கு உங்கள் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாட்டில் இயங்கும் சக்தியுள்ள ஊடகமான திரைப்படத்துறையில் அங்கமான இசைத்துறையில் நீங்கள் பணி புரிகிண்றீர்கள்.
பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்களில் பாடல்கள் பாடி இருக்கின்றீர்கள். உங்கள் குரல் அழகாய் இருக்கிறது அதனால் அதை வைத்து பிழைப்பு நடத்துகின்றீர்கள். இல்லை என்றால் உங்கள் நிலைமை என்னவென்று நீங்கள் யோசித்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் மறத்தமிழச்சி என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டுள்ளீர்கள். அதிலிருந்து தெரிகிறது உங்களின் தமிழார்வம் எந்த நிலையில் இருக்கிறது என்று.
உங்கள் தொழில் பாட்டு பாடுவது. அதை சிறப்பாக செய்யுங்கள். அதில் மென்மேலும் வளர முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு சமூகஅக்கறை இருக்கலாம். அதை பற்றி நீங்கள் கருத்துக்களும் வெளியிடலாம், உங்களுக்கு தடையே இல்லை. எனக்கும் அதே போன்று தான்.
ஆனால் நான் வெளியிட்டால் எனக்கு எதிராக என்னுடைய நண்பர்கள் ஐந்திலிருந்து பத்து பேர் வரையிலும் கருத்து தெரிவிப்பார்கள். பிறகு எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம். நீங்கள் அப்படியா ஐந்து கோடி தமிழர்களுக்கு தெரிந்த பெயர். உங்களை குறைந்தது ஆயிரம் கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கும். நீங்கள் எப்பொழுது தவறு செய்வீர்கள், உடனடியாக "இவரா இப்படி?!" என்று தலைப்பு செய்தி போட்டி கட்டுரை எழுதி காசு பார்க்கும் கூட்டமும் இருக்கும். அதனால் சமுதாய பிரச்சனைகளை பற்றி நீங்கள் கருத்து வெளியீடும் பொழுது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சரி கருத்து தெரிவித்தாகிவிட்டது என்ன செய்வது என்று எண்ணினால், அதை எதிர்கொள்ள தைரியம் வேண்டும். ஆமாம், நான் தான் சொன்னேன்,
என்ன வந்தாலும் நான் பார்த்துக்கொள்வேன் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். ஆயிரம் பேருக்கு நல்லது நடக்கிறது என்றால் நிச்சயம் ஐம்பது முதல் நூறு பேருக்கு கெடுதல் நடக்கும். அதே மாதிரி தான் உங்களுக்கு சரி என்ற கருத்து நிறைய பேருக்கு தவறாக தெரிகிறது. இட ஒதிக்கீடு, இதை பற்றி பேச அரசியல்வியா(வா)திகளே அஞ்சுகிறார்கள். நீங்கள் இதை பற்றிய கருத்தை சமூக வலைத்தளத்தில் தான் தெரிவித்து இருக்கின்றீர்கள். எந்த செய்தியிலும், எந்த ஊடகத்திலும் தெரிவிக்கவில்லை. அப்படி ஒரு வேலை தெரிந்திருந்தால் இன்னமும் நிறைய பேருக்கு சென்று அடைத்திருக்கும். பிறகு யோசித்து பாருங்கள். உங்கள் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு இருக்கும். உங்கள் பெயர் நாரி நசநசவென்று ஆகியிருக்கும்.
என்றுமே கருத்து தெரிவிக்கும் பொழுது எதை பற்றி கருத்து தெரிவிக்கிறோம் என்று யோசிக்க வேண்டும். நீங்கள் கூறியிருக்கும் தலைப்பை பார்க்கும் பொழுது ஒரு வேலை உங்களுக்கு பாடும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அது உண்மையாக இருக்கும் பட்ச்சதில் இசையமைப்பாளர்களை நாடுங்கள். நாடி வாய்ப்புகள் கேளுங்கள். அதே போல் எங்கள் நடிகர்கள், படங்களில் மட்டும் தமிழ் உணர்வை கொட்டி தீர்ப்பார்கள். யார் பாடுகிறார்கள் என்றெல்லாம் கவலை பட மாட்டார்கள். அதனால் உங்களுடைய வாய்ப்புகள் பறிபோகாது. அதை விட்டுவிட்டு மிக மிக உணர்ச்சியை கிளரும் தலைப்புகளை கையிலெடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் உங்கள் கையினால் கொள்ளிக்கட்டை எடுத்துக்கொங்கு உங்கள் தலையை சொரிந்து கொள்ளுவது போன்றது.
நீங்கள் இது வரை உங்களின் புகைப்படங்களுக்கு wow, super singing, I luv u so much, u r looking so gorgeous, so beautiful, sochweet, u r voice is great, ur pronoustation is excellent, u r d best in tamil singers, போன்ற கொஞ்சும் கருத்துக்களை பார்த்திருப்பீர்கள்.
தமிழர்கள் பாசம் காட்டினால் கடலை விட ஆழமாக காட்டுவார்கள்
எதிர்த்தால் எரிமலையை விட சூடாக நெருப்பை கக்குவார்கள், என்று நீங்கள் உணரவில்லை என்று நினைக்கிறேன்.
அதனால் தான் இந்த எதிர்ப்பை உங்களால் சமாளிக்க முடியவில்லை. சமாளிக்க முடியவில்லை என்றால், கருத்தளிக்காமல் ஒதுங்கி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படியா உங்கள் தாயாரின் முந்தானையில் ஒளிந்துகொள்வீர்கள்? ஒன்று நன்றாக புரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு ஆதரவாக கருத்து கூருகின்றவர்கள் உங்களுக்காக களத்தில் இறங்க மாட்டார்கள். வேண்டும் என்றால் நீங்கள் சார்ந்த வகுப்பை சேர்ந்தவர்கள் வரலாம். ஆனால் இங்கு கருத்தளித்த அத்தனை தமிழ் உறவுகள், பல விதமான போராட்டங்களில் ஈடு பட்டு இருப்பார்கள். இதை சிந்தனையில் கொள்ளுங்கள்.
உங்களுடைய சமூக அக்கறை வரவேற்கத்தக்கது. அதை இந்த உலகத்தில் பல முறை யோசித்துவிட்டு உரக்க சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு
சமூக வலைதளங்களில் வெளிஈடுகிண்றீர்கள். அங்கே weekend partyக்கு போகும் மக்கள், India is shining, Be proud as Indian. Indians are untoucables, Jai hind என்று ஜால்ரா அடிக்கும் நிறைய கூட்டமே இருக்கும்.
ஆனால் ஏழைகளின் வலி உணர்தவர்கள், காய்ந்த வயற்றிற்கு போராடுகின்றவர்கள், அநீதிக்கு எதிரானவர்கள், போராளிகள் என்று வெகு சிலரும் இருப்பார்கள். பாவம் நீங்கள் அவர்களை போன்று இருப்பவர்களின் கண்களில் சிக்கி கொண்டீர்கள்.
அவர்கள் செய்தது தவறு என்றால் நீங்கள் செய்ததும் தவறு தான். தயவு செய்து நீங்கள் கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கி கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் மீதும் வழக்கு தொடுக்கலாம் என்பதை இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்.
அம்புக்கு தண்டனை குறைவு, எய்தியவருக்கு அதிகம். நீங்கள் எய்த்தவர்.
அடுத்த முறை உங்கள் கருத்துக்களை இணையத்தில் வெளியிடும் பொழுது பாதிப்பில்லாத தலைப்பை எடுங்கள். இசை தான் உங்கள் இனம், மொழி, மதம், சாதி என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அதை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். அது சம்மந்தமாக கருத்துகளை வெளியிடுங்கள். எங்களுக்கு தமிழினம், தமிழ்மொழி போன்ற ஒன்றே ஒன்று மட்டும் இருக்கிறது. சிந்தனையில் வைத்து செயல்படுங்கள். நன்றி

அவர்கள் உங்களை பற்றி பேசியது குற்றம் என்றால் அவர்களை அப்படி பேச தூண்டியது உங்களின் அந்த பதிப்பு தான்.
அவர்கள் செய்தது தவறு என்றால் நீங்கள் செய்ததும் தவறு தான். தயவு செய்து நீங்கள் கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கி கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் மீதும் வழக்கு தொடுக்கலாம் என்பதை இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்.
அம்புக்கு தண்டனை குறைவு, எய்தியவருக்கு அதிகம். நீங்கள் எய்த்தவர்.
அடுத்த முறை உங்கள் கருத்துக்களை இணையத்தில் வெளியிடும் பொழுது பாதிப்பில்லாத தலைப்பை எடுங்கள். இசை தான் உங்கள் இனம், மொழி, மதம், சாதி என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அதை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். அது சம்மந்தமாக கருத்துகளை வெளியிடுங்கள். எங்களுக்கு தமிழினம், தமிழ்மொழி போன்ற ஒன்றே ஒன்று மட்டும் இருக்கிறது. சிந்தனையில் வைத்து செயல்படுங்கள். நன்றி
உங்கள் ஆதங்கம் உண்மை நண்பரே...
ReplyDeleteஎல்லாம் பணம் இருக்கும் _____...