ஐம்பொன்னில் விக்கிரகங்கள்
தங்கத்தில் ஆபரணங்கள்
வெள்ளியில் கதவுகள்
தங்கத்தில் கோபுரங்கள், கூரைகள்
கடவுளை காவல்காக்க காவலர்கள்
ஆனால்
பள்ளி மாணவர்கள்
அரசமரத்தடியில் கூரையில்லாமல்.....
தேசிய நெடுஞ்சாலைகளில்
கையேந்தும் சிசுக்கள்......
இரும்பு பட்டரையில்
உருக்கப்டும் பிஞ்சுகள்......
பட்டாசு தொழிற்சாலையில்
கருகும் குழந்தைகள்......
உண்டியலில் போடுவதை
ஏழைகளின் கல்விக்கு கொடுப்போம்,
ஆறாம் அறிவை பயன்படுத்துவோம்.
பெறுதலை விட
கொடுத்தாலே இன்பம் என்று உணர்வோம்.
மனிதனாக வாழ்வோம்
மனிதத்தை நேசிப்போம்
nalla thagaval anna Karthikeyen
ReplyDeleteஇந்த சிந்தனை பிறந்திருந்தால் எப்போதே நாம் முன்னேறி இருப்போம், இன்னும் திருந்தாத ஜென்மங்கள் இருக்கும் இவ்வுலக இருந்தென்ன பயன்.
ReplyDeleteஅருமை...
ReplyDelete