இன்றைய குறள்

Sunday, October 14, 2012

பள்ளிப்பருவத்து நட்பு


காக்கா கடி கடித்து தின்ற கமர்கட்டும்,
திருட்டு மாங்காய்
ருசியும் என் நாவிலே இருக்குதடா
என் தோழனே...

என்ன விளையாடுவது என்று
விளையாட்டாக சண்டை
போட்டதும்,
பிறகு கோவில் தூண்களில்
மறைந்து
கண்ணாமூச்சி ஆடியதும்,
தாவி திரிந்த வேப்பமரமும்,
சீவான்குச்சியில் வேப்பங்காய்
சொருகி
ஒருவர் மற்றவரை தாக்க
கூட்டணி வைத்த
நண்பர்கள் எங்கே?

மசாலா டப்பியில் இருந்து
திருடிய காசில்
சேமியா ஐஸ்
தின்றதும்
என்றும் நீங்காத பசுமைகள் மறக்க முடியாத நாட்கள்

1 comment:

பழமொழி