உன் கண்களின் ஊக்கம்,
திரும்பசெய்கிறது உன் பக்கம்.
மீண்டும் செயல்படும் முன் நோக்கம்.
அதனால் என் உள்ளத்தில் தாக்கம்,
தினமும் உன்னை பார்க்கும் பழக்கம்.
ஏனோ என்னுள் மயக்கம்,
பழக்கப்படாத புது ஏக்கம்,
பரந்திருந்த என் உலகம் முடக்கம்.
இன்று உன்னால் நுடக்கம்.
இன்றிலிருந்து துவக்கம்,
நடித்திராத இனிய நாடகம்,
அதில் இசையோடு பாடும் காதல் இராகம்.
வீழ்ந்தேன் காதலெனும் தடாகம்,
நீயில்லையே என்றுமே துக்கம்.
என் இறுதியும் பக்கம்.
மண்ணோடு நான் அடக்கம்.
ada...
ReplyDeleteமோனைகள் முறுவலிக்க செய்கிறது இன்னும் கூட ஒரு வரியை முடித்துவிட்டு அதன் பின் அடுத்ததை தொடங்குங்கள் இன்னும் அழகாக இருக்கும் .பாராட்டுகள்
ReplyDeleteஒவ்வொரு வரியும் முடித்துள்ள விதம் அருமை...
ReplyDelete