மங்கும் மாலை பொழுது
புற்களின் பச்சை வண்ணமும்
மாலையின் மஞ்சள் வண்ணமும்
வர்ண போட்டியில்
வெற்றிபெற கடுமையாக
மோதிக்கொள்ளும் காட்சி.
மரங்களும் தங்கள் பங்கிற்காக
நிழலை
பூமியில் தெளித்து
கறுப்பு கொடி காட்டுகிறது
இயற்கைக்குள் போட்டி வேண்டாம்
என்பது போல்.
மனிதனுக்கு மட்டும் இது
ஒரு அழகான
மனநிம்மதியான
ரம்மியமான
குளிர்ச்சியான
வண்ணமிகு ஓவியமாக
தோன்றுகிறது.
இயற்கை என்றுமே நமக்கு
அழகாக தோன்றும்.
ஆனால் நாம் மட்டும் அதற்கு. ம்ம்ம்ம்ம்ம்ம்
அழகு... அருமை...
ReplyDeletearumai !
ReplyDeletevarikal...