சின்ன சின்ன துவாரங்கள்,
ஊசி ஊசி முகடுகள்,
சிறிய சிறிய பள்ளங்கள்,
குறுகிய பாறைகள்,
உடலை கிழிக்கும் கூர் முனைகள்,
காயப்படுத்தும் சறுக்கல்கள்,
இவை அனைத்துமே
வெற்றி படிகள் தான்,
சிகரமும் பக்கம் தான்,
கயிறு என்ற நம்பிக்கை
நம்மிடம் உள்ளவரை.
இலக்கை நோக்கி பயணிப்போம்
சிகரத்தை அடைந்திடுவோம்
No comments:
Post a Comment