இன்றைய குறள்

Friday, August 10, 2012

பொய் அலங்காரம்




இயற்கை சூடிக்கொண்ட
வென்முத்துக்கள்
பனித்துளிகள்
======================

இயற்கைக்கும் ஆசை
உன்னை போலவே,
அதுவும்
அலங்காரம் செய்துகொண்டது
பனித்துளிகளின் உதவியோடு
======================

ஒய்யாரமாய்
வீற்றிருக்கிறது பனித்துளிகள்.
பகலவன்
வருகையை
மறந்துவிட்டனவோ!!!!!!!
======================

இக்கணத்தில் கலைந்துவிடும்
அற்பமான
அலங்காரம்
தேவையா?

என்று கோபமாக
கேட்கிறது
சூரியன்.
======================

ஆசையாக அலங்கரித்துக்கொண்டது
தன்னால்

கலைந்துவிடுமோ
என்ற
ஏக்கத்தில்
பகலவன்
கருமேகத்தின்
இடையே
கண்ணாம்பூச்சி ஆடுகின்றானோ?
========================

No comments:

Post a Comment

பழமொழி