===============
அமைதி களத்தில்
புரட்சி
தாவல்
================
கும்மிருட்டை
கிழித்த
வெளிச்சத் துகள்கள்
ஊடாக
நானும்
பயணிக்கிறேன்
பயமரியாமல்
===============
யாவரும் அஞ்சும்
கடவுளை
ஆராய்கிறேன்
பகுத்தறிவு
என்ற
பலத்தின்
துணையோடு
===============
அடைத்திருந்த
அடிமைத்தனம்
அகல,
அன்றியிருந்த
அகங்காரத்தை
அகற்றி,
அகலமான
அண்டத்தில்
அடிமை என்னும்
அடையாளத்தை
அடக்கமாக்கி
அகந்தையோடு தன்னசியாய் ஒரு பயணம்
===============
ஆதரவாக
ஆட்கள் இன்றி
ஆத்மார்த்தமாக
ஆசையோடும்
ஆவலோடும்
ஆர்வத்தோடும், ஒரு
ஆனந்த பயணம்..........
===============
மீன் குஞ்சிக்கு
நீந்த
கற்றுக்கொடுப்பதில்லை.
புரட்ச்சியாளருக்கு
தடைகள்
எதுவுமில்லை.
பரந்திருக்கும்
பாரில் ஒரு
சுதந்திர காணி,
இதுவே தாகமென்று
இருந்த
சுதந்திரவேட்கை
இன்று தணியும்
என்ற நம்பிக்கையோடு
பயணிக்கிறேன்........................
சுதந்திர காற்றை சுவாசிப்பேன்
என்ற நம்பிக்கை
சுடரை
மனதில் சுமந்து!
No comments:
Post a Comment