படித்தது:-
பாதுகாக்கப்பட்ட குடிநீரும், கழிப்பறையும் வேண்டுமா அல்லது அலைபேசி வேண்டுமா:-
இந்த படத்தை பாருங்கள்
இந்த பெண்கள் எதற்காக இப்படி நிற்க வேண்டும்
பக்கவாட்டில் பாதுகாப்பு கம்பி இல்லை
முறையான படிகள் கூட இல்லை
தகுந்த பயிற்சியுடன் சர்க்கசில் சாகசம் செய்பவர்களே கீழே பாதுகாப்பிற்கு வலை கட்டி இருக்கும் போது இந்த பெண்கள் ஏன் உயிரை பணயம் வைத்து நிற்க வேண்டும்.
கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இவர்கள் என்ன செய்கிறார்கள்.
தங்கள் வீட்டில் சமையலுக்கும், குடும்பத்தினர் பருகுவதற்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக இந்த அபாயங்களை தினமும் சந்திக்கிறார்கள்.
இந்தியாவில் இது போல் பல ஊர்கள் இருக்கும் நிலையில் வீட்டிற்கு ஒரு அலைபேசி தேவையா என்று கேள்வி எழுகிறது
ஒரு அரசு என்பது எதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதில் முதலிடம் விவசாயம், உணவு, குடி.
1. நீர் மேலாண்மை, விவசாயம், உணவு, குடிநீர்
2. கல்வி சுகாதாரம்
3. சாலை, தொடர்வண்டி, மின்சாரம், தகவல் தொடர்பு
4. தொழில்
5. அரசாங்கம்
6. பாதுகாப்பு
7. கலை, விளையாட்டு
இந்த வரிசையை மாற்றி முக்கியத்துவம் அளித்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை (சிங்கப்பூர், துபாய் போன்ற ஊர்கள் விதிவிலக்கு)
கலையை விட பாதுகாப்பு முக்கியம்....
பாதுகாப்பை விட அரசாங்கம் நடப்பது முக்கியம்.....
அந்த அரசாங்கம் நடக்க தொழில் (மற்றும் அதன் மூலம் வரும் வரிகள்) முக்கியம்.
அந்த தொழில் (உற்பத்தி மற்றும் சேவை) நடக்க போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு முக்கியம்
அந்த தொழில் செய்ய கல்வி , பயிற்சி முக்கியம்
அந்த மக்கள் ஆரோக்கியமாக இருப்பது அதை விட முக்கியம்
அனைத்தையும் விட முக்கியம் தினமும் உணவு வேண்டும், நீர் வேண்டும்.
அதற்கு விவசாயமே அடிநாதம்
உழுதுண்டு வாழ்வார் என்று வள்ளுவர் சொன்னது இதைத்தான்.
அமெரிக்கா போன்ற நாடுகள் விவசாயத்தையை நீர் மேலாண்மையையும் கண்கொத்தி பாம்பாக கண்காணிப்பது இந்த அடிப்படையில் தான்.
அலைபேசி என்பது தகவல் தொடர்பு - 3ஆம் இடத்தில் உள்ளது.
அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் என்ற நிலை வந்த பிறகே இது தேவை.
அனைவருக்கும் கல்வி என்ற நிலை வருவதற்கு முன்னர், அனைவருக்கும் உணவு தேவை
இந்த படத்தை பார்த்து என் உள்ள குமுறலின் வெளிப்பாடு:-
மக்கள் வாழும் சாலை ஓரம்
முன்னேற்றம் வரும் நாளோ தூரம்
மனம் முழுவதும் பாரம்
அரசியல்வாதிகளின் மாறாத ஒய்யாரம்
ஆள்பவர் மனதில் இல்லை துளி ஈரம்
மௌனமாகவே பொறுத்திருந்து மாறும் நேரம்
ரௌத்திர தமிழ் தாயின் வரம்
என்றும் மாறாத நெஞ்சின் உரம்
புதைந்தே இருந்து துளிர்த்த வீரம்
பலம் பெற்று தயாராகும் கரம்
விரைவில் ஓங்கி ஒலிக்கும் சுந்திர ஓங்காரம்......................
பட்டினி சாவை எதிர்த்து நாம் உண்ணாவிரதம் இருக்கும் அவலம் இங்கு மட்டுமே தோழரே.... இனியாவது
ReplyDeleteஇருப்பாய் தமிழா நெருப்பாய் ...!
இருந்ததுபோதும் செருப்பாய்...!
அருமையாக தெரிவித்திருக்கிண்றீர்கள் தோழரே....
Delete