இன்றைய குறள்

Thursday, August 9, 2012

ஓயாத நினைவலைகள் - 2




உறக்கத்தை
தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால்
நித்தமும்
கண்ணீர் கடலில்
தத்தளிக்கிறேன்
=================




கல்வெட்டில் பதித்தால்
அழித்துவிடுவார்களோ
என்று அச்சம்,
உன் நினைவுகளை
என் இதயபேழைக்குள்
பத்திரமாக பூட்டினேன்
===============





பிரிவென்னும்
தீரா சோகத்தை
மறக்கச்செய்கிறது
உன்னுடைய
சுகமான நினைவுகள்
================



உன் உருவத்தை
கண்ணிலே புகைப்படம்
பிடித்துக்கொண்டு
உன் நினைவுகளை
நெஞ்சிலே விதைத்தேன்
===============



நினைவுகள் இத்தனை
சுகமா?
உன்னை பிரித்திருக்கும்
பொழுதினில் தான் உணர்கிறேன்..
இதற்காக மீண்டும்
உன்னை காதலித்து
பிரியவும் தயார்
====================

கலைந்த
உறக்கத்திற்காக
தாலாட்டு
இசைக்கிறது
உன் நினைவுகள்
============




அகலாத உன்
நினைவுகள்
எனக்குள்
புதைந்து இருக்கும்
வரையில்
தூரம் என்பது
வெறும் வார்த்தை தான்......

பிரிவு இல்லை
============

ஆறாத காயத்தில்
மயிலிறகினால்
மருந்து
வருடல்.
உன் நினைவுகள்

=============

No comments:

Post a Comment

பழமொழி