கனவு
என்ற அற்புதமான
பயணத்தில்
இயலாதே இல்லை.
அனைத்தும் சாத்தியமே!
கால்கள் துள்ளட்டும்,
இறக்கை முளைக்கட்டும்,
சிறகடித்து
உடலை விண்ணிலும்
உள்ளத்தை மகிழ்ச்சி கடலிலும்
மிதக்க வையுங்கள்.
உங்கள் பிரயாணம் இனிதே அமையட்டும்.
புலப்படாத சங்கதிகளை அறியுங்கள்.
அகன்ற அண்டம் நமக்கே சொந்தம்
என்ற உணர்வு.
பாறையிலே பூக்கள் பறிக்கலாம்!
விண்ணை முத்தமிடலாம்!
ஆழ்கடலினுள் முத்தெடுக்கலாம்!
பாலையிலும் நீர்எடுக்கலாம்!
======================================
என் கனவுகள்
அடங்கிய
சிந்தனை பேழை
இங்கே
நீர்க்குமிழி போல்
சுக்கல்சுக்கலாக
உடைந்த
வருத்தம்........
விரலாய் விடியல்
======================================
azhakiya kavi!
ReplyDelete