இலங்கை அதிகாரிகள் தமிழகத்தில்
எங்கள் உறவுகளை அழித்துவிட்டு
எங்கள் மண்ணில் பயிற்சியா?
மனக்குமுறலை பல பரிணாமங்களில்
வெளிப்படுத்தியும்
மீண்டும் அதே!
தமிழர்கள் தான் இந்தியர் என்று
மார்தட்டி பெருமையடைவர்!
இந்தியர்கள் தமிழரை
இராவணன் சொந்தம் என்று இகழ்வர்!
இராவணன் என்றால் இழிவா!?
இல்லை. நமக்கு பெருமை தான்.
எத்தனை கொக்கரித்தாலும்,
அறைக்கூவல் விடுத்தாலும்,
கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினாலும்,
பட்டினி போராட்டம் நடத்தினாலும்,
உயிரை துச்சமென தீக்குளித்து மான்டாலும்,
உன்னை பாரோம்
இது தான் இந்திய அரசாங்கத்தின் நிலை.
ஆட்சி மாறினாலும்
நிலை மாறாது.
சொந்த மண்ணிலே,
அனைத்தையும் இழந்து
சுதந்திர அனாதையாக
தமிழகத்து தமிழர்கள்!!!!
No comments:
Post a Comment