இன்றைய குறள்

Wednesday, August 22, 2012

தாய்மொழி தமிழின் பெருமை

ஆங்கில மொழிக்கு அப்பா யாரென்று அறிந்து கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் இந்த இரண்டு காணொலியில் உள்ளது. உலகத்தோடு நாம் போட்டியிட ஆங்கிலம் கற்று கொள்வது அவசியம்தான். அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே சமயம் உலக தரத்துக்குகு தமிழை உயர்த்த வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. நண்பா நீ ஆங்கிலம் கற்று கொள்வதில் எனக்கு மகிழ்ச்சிதான்.





ஆனால் நம் தாய்மொழி தமிழ் பெருமையை நீ தவறவிடுகிறபோதுதான் நெஞ்சம் தீயில் தவிக்கிறது. உன் குழந்தையை ஆங்கில பள்ளியில் சேர்க்கும் வேளையில் முத்தமிழ் அன்னையை முதியோர் இல்லத்தில் விட்டுவிடாதே! என்பதே எங்களின் ஒருமித்த வேண்டுகோளாக இருக்கிறது. நிச்சயம் இந்த இரண்டு காணொலியையும் நீங்கள் கேட்க வேண்டும், காண வேண்டும். இந்த தகவலை எல்லா தமிழருக்கும் எடுத்து செல்ல வேண்டியது நம் தலையாய கடமை. தமிழை வளர்க்க தவறினாலும் தேய்ந்து போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்... இது நம் தாய்மொழியல்லவா நண்பா...
உன்னையும் என்னையும் விட்டால் தமிழ்த் தாய்க்கு வேறு பிள்ளைகள் இல்லை என்பதை உணர்ந்து கொள் நண்பா...

இந்த காணொலியை தயாரித்த சகோதர்களுக்கும் தமிழ் பணியில் தங்களை அர்பணித்த சகதோழர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். நன்றி...

2 comments:

  1. அன்பு நண்பரே அருமையான பகிர்வு.
    இந்தப் பதிவை நாளை நன்றியுடன் வலைச்சரத்தில் பகிர இருக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  2. அன்பின் கார்த்திகேயன் - இத்தளம் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது - http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_6.html - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

பழமொழி