இமை என்னும்
குடையினுள்,
எத்தனை
பாவனைகள்
எனக்காக காத்திருக்கும் பொழுதினில்.
====================
உன் கண்கள்
என் கவிதைகளின் தலைக்காவேரி.............
====================
கருமேகத்தினுள்
இருந்து வெளியான
இரு நிலவுகளை
ஒரே நேரத்தில்
நீ
இமை திறந்த
பொழுதினில்
பார்க்கிறேன்...........
====================
உன்
கண் பார்வை
வீசிய
கதிர்வீச்சில்
பேதளித்தது
என் இதயம்
No comments:
Post a Comment