விடியும் வரை
காத்திருக்க வேண்டாம்
கனவிலேயே உன்னை
சந்திப்பேன்.
இரவு வணக்கங்கள்....
===============================================
கனவில் நான் வந்து
உன் தூக்கத்தை
தொலைக்க விரும்பவில்லை
விடியும் வரை
காத்திருக்கிறேன்
இரவு வணக்கம்....
===============================================
ஆஹா.......
என் கனவில்
நீ
வந்து
என்னை
துயிலேழுப்பினாய்.
நடுநிசியில் ஒன்றும்
புரியாமல்
முகபுத்தகத்தை
நாடினேன்
காலம் கடத்த....
===============================================
நீ இல்லாத
இரவு
நரகமாய்
இருக்கிறது,
நடுநிசியிலும்
என் நினைவு
உன் கனவில் வெளிப்படும்,
நான் பரவசம் அடைய.....
===============================================
நாம் கைக்கோர்த்து
நடந்த
பகல் பொழுது
வினாடிகளை,
மிகைப்படுத்தி
காட்டும்
கனவுகள்
மெய்ப்படட்டும்
இரவு வணக்கங்கள்
===============================================
கனவும் உன்னைப்போலவே
அழகு தான்
உன்னை அதில் காணும் பொழுது
===============================================
அன்பே,
விடியலை தடுத்திரு.
பகலவனை உறங்கச்சொல்.
தாமதமாக உதிக்கச்சொல்.
கனவெல்லாம் நீயே.........
===============================================
சூரியனின்
தூரிகை ஏன்
விடியச்செய்கிறது
அதுவும்
கறுப்பு வண்ணம்
அடித்ததால்
எத்தனை சுகமாய் இருக்கும்?
===============================================
பகலவனே
சிறிது நேரம் காத்திரு.
என்னவளின் கனவு
மிச்சம் இருக்கு.
===============================================
arumai!
ReplyDeleteநன்றி தோழரே.........
Deleteஒவ்வொரு கவிதையும் அடுத்த கவிதையுடன் போட்டி போடுவது போல் உள்ளது.... அருமை....
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்.... நன்றி....
நன்றி தோழரே
DeleteKana kachithamai kavikl ovanraiyum padaithulleerkal
ReplyDeleteநன்றி கவி அழகன்
Delete