இன்றைய குறள்

Thursday, June 28, 2012

யூரோ 2012 முதல் அரையிறுதி போட்டி ஸ்பெயின் எதிராக போர்ச்சுகல் (Spain Vs Portugal)



முதல் காலிறுதி போட்டியில் செக் குடியரசை வென்ற போர்ச்சுகல் அணியும் மூன்றாவது காலிறுதி போட்டியில் பிரான்சை வென்ற ஸ்பெயின் அணியும் மோதும் முதல் காலிறுதி போட்டி. கடந்த 20 ஆண்டுகளில் நடப்பு வாகையர் பட்டத்தை வென்ற அணி அரையிறுதிக்கு நுழையும் முதல் முறையாக விளங்குகிறது ஸ்பெயின். போர்ச்சுகல் அணியின் தலைவராக உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரொனால்டோ தலைமையில் களம் இறங்குகிறது. நடப்பு உலக கோப்பை 2010 வாகையர் பட்டம் மற்றும் நடப்பு யூரோ 2008 வாகையர் பட்டம் போன்றவற்றை தன்வசம் வைத்திருக்கும் ஸ்பெயின் எப்படியாவது இறுதி போட்டியினுள் நுழையவேண்டும் என்ற முனைப்போடு விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை.
யூரோ 2004இல் கிரீஸ் அணியிடம் இறுதி போட்டியில் தோல்வியடைந்து கோப்பை கனவு தகர்ந்து போன வருத்தத்தை இந்த வருடம் கோப்பை வெல்லும் கனவோடு போர்ச்சுகல் கடுமையாக போராடும்.

ஆட்டத்தை சபை அணியினர் துவங்கினார்கள். ஆட்டத்தின் நிமிடத்தில் ஸ்பெயினின் காப்பாளர் கட்டத்துக்கு வெளியே தனக்கு கிடைத்த பந்தை இலக்கு நோக்கி போர்ச்சுகளின் மிகள் அடிக்க, ஸ்பெயினின் அலோன்சோ தடுத்து வெளியே அனுப்பினார். அதில் கிடைத்த corner-kick கிடைத்தது. இலக்கு எதுவும் அடிக்கபடவில்லை என்றாலும் போர்ச்சுகளுக்கு இது அருமையான துவக்கம்.

ஸ்பெயின் வீரர்கள் தாங்கள் உலக கோப்பை வாகையர்கள் என்று நிரூபிக்கும் வகையில் போர்ச்சுகளின் தடுப்பக்கள வீரர்களின் அரணை உடைத்து ஒருவருக்கொருவர் பந்தை கொடுத்து கடைசியாக இனியாஸ்டா இலக்கிற்கு நேராக இருக்கும் நெக்ரேடோ கொடுக்க, சரியான நேரத்தில் போர்ச்சுகளின் தடுப்புகள வீரர் வெளிய அடிக்க முயன்றார். அது நேராக ஸ்பெயினின் அர்பேலோ செல்ல, அவர் இலக்கினுள் அடிக்க முயன்று வெளியே அடித்தார். இது ஸ்பெயினுக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு. சிறிது நேரத்தில் காப்பாளர் கட்டத்திற்கு வெளியே இருந்து இனியாஸ்டா பந்தை இலக்கினுள் அடிக்க முயன்று வெளியே அடித்தார்.

அடுத்த சில நிமிடத்தில் ரொனால்டோ ஸ்பெயின் காப்பாளரின் வலது ஓரத்தில் பந்தை கடத்திக்கொண்டு வேகமாக சென்றார். கிட்டத்தட்ட கொடு முடியும் இடத்தில் இருந்து காப்பாளர் கட்டத்தினுள் இருக்கும் நாணிக்கு பந்தை வழங்க உதைத்தார். நாணி அதை தலையால் முட்டி இலக்கினுள் அடிக்க முன்னேறி வர, எச்சரிக்கையாக இருந்த காப்பாளர் காசியாஸ் பந்தை தடுத்துவிட்டார்.

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ரொனால்டோ பந்தை எடுத்துக்கொண்டு முன்னேறி செல்ல, காப்பாளர் கட்டத்துக்கு இடது பக்கம் மிக அருகில் அவரை கீழே வைத்தனர் ஸ்பெயினின் தடுப்புகள வீரர்கள். இதனால் அவர்களுக்கு ஒரு free-kick கிடைத்தது. ரொனால்டோ அதை நேராக 2 வீரர்கள் நின்ற சுவற்றில் அடித்து வெளியானது.

பந்தை இரு அணியினரும் இலக்கை நோக்கி கடத்தி சென்றதில் முனைப்பு காட்டியதால் ஆட்டம் வேகமாக நகர்வது போல் தோன்றியது. ஆட்டம் துவங்கி 25 நிமிடம் முடியபோகும் நிமிடத்திற்கு முன்பாக ரொனால்டோவின் அருமையான முயற்சி இலக்கிற்கு மிகவும் மேலே சென்றது.

போர்ச்சுகல் அணியினர் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி ஸ்பெயினின் தடுப்பு அணையை உடைக்க முயன்றவன்னம் இருந்தனர். ஆனால் ஸ்பெயின் அணியினரும் மிக நேர்த்தியான முறையில் தங்களுடைய பணியை தொடர்ந்தனர்.

ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயினின் counter-attackமூலம் பந்தை டோறேசுக்கு வழங்க அவர் நேர்த்தியான முறையில் ஜாவிக்கு கொடுக்க. அவரை சுற்றி போர்ச்சுகல் வீரர்கள் இருந்ததால், காப்பாளர் கட்டத்துக்கு வெளியே தனியாக இருந்த இனியாஸ்டாவுக்கு வழங்க, அவர் அடித்த பந்து இலக்கு கம்பிக்கு சற்று நெருக்கமாக மேலே தவழ்ந்து சென்றது.

அடுத்த நிமிடத்தில். ரோனால்டோவுக்கு அருமையான வாய்ப்பு. காப்பாளர் கட்டத்திற்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி அடிக்க முயன்று வெளியே அடித்தார். போர்ச்சுகல் அணியின் அருமையான முயற்சி.

ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் தனக்கு வழங்கிய பந்துடன் மத்தியகளத்தில் இருந்து டேவிட்சில்வா போர்ச்சுகல் இலக்கு திசை திரும்ப, நிறைய வெற்று இடம் இருந்தது. உடனே மிக மிக விரைவாக இலக்கு நோக்கி சென்றார். காப்பாளரின் வலதுபக்க வீரருக்கு வழங்க முயன்றார். ஆனால் அது வேகமாக அடித்ததால் வெளியே சென்றது.

முதல் பாதி முடிவடையும் கடைசி நிமிடத்தில் ஜாபி அலோன்சோ போர்ச்சுகளின் காப்பாளர் கட்டத்தினுள் உதைக்க செஜியோ ராமோஸ் தலையால் முட்டி இலக்கினுள் அடித்தார். போர்ச்சுகளின் காப்பாளர் முன்னேறி வந்து பிடிக்க முதல் பாதி சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இருபுறமும் பந்து மாறிமாறி செல்ல மிக மிக விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் இலக்கினுள் பந்தை அடிக்க யாருமே முயலவில்லை என்பதை முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன என்று தான் சொல்லவேண்டும்.

ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் ஜாவி அருமையான முயற்சி இலக்கினுள் அடித்தார். நேராக காப்பாலரிடமே அடித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் போர்ச்சுகலின் முயற்சி இஅல்கிற்கு வெளியே அடித்தனர்.

போர்ச்சுகளுக்கு அருமையான வாய்ப்பு 71வது நிமிடத்தில் கிடைத்தது. ரொனால்டோவை இடறி வீழவைத்ததால் அவர்களுக்கு ஒரு free-kick கிடைத்தது. இதை பயன்படுத்தி இலக்கு நோக்கி அதிவேகமாக அவர் உதைத்த பந்து இலக்கு கம்பிக்கு சற்று மேலே வேகமாக சென்றது.

ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் நாணியை இடறி விழவைத்ததினால் கிடைத்த free-kickகை காப்பாளரின் இடது புறத்தில் உதைக்க, அதை காசியாஸ் பிடித்தார்.

அடுத்த சிலநிமிடங்களில் ரொனால்டோவை இடறி ஜாபி அலோன்சோ இடறி விழவைக்க அதன் மூலம் கிடைத்த free-kickகை ரொனால்டோ உதைக்க அது அர்பெலோவின் கையில் பட்டதால் அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. மேலும் ஒரு free-kick வழங்கப்பட்டு அதை ரொனால்டோ, இலக்கு கம்பிக்கு மேலே அடித்தார்.

ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்களில் ஜாவிக்கு மாற்று ஆட்டக்காரராக பெட்ரோ களம் இறங்கினார்.

ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் counter-attackநடத்தினர் போர்ச்சுகல் அணியினர். மிக மிக வேகமாக பந்தை கடத்தி செல்ல, போர்ச்சுகல் அணியின் வீரர்களும், ஸ்பெயின் அணியின் வீரர்களும் இருக்க, ஸ்பெயினின் தடுப்புகள வீரர்களிடம் பந்து சிக்காமல் ரொனால்டோவிடம் கொடுக்க, அதை கொஞ்சம் அவசரப்பட்டு வெளியே அடித்து வீனடித்துவிட்டார். இது போர்ச்சுகளுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு. இது இந்த ஆட்டத்தில் கிடைத்த சிறந்த வாய்ப்பு. இதில் இலக்கு அடித்திருந்தால் போர்ச்சுகல் வெற்றி பெற்று இருக்கும்.

இத்துடன் ஆட்டம் சம நிலையில் முடிந்தது. கூடுதல் 30 நிமிடங்களில் வழங்கப்படுகிறது.

கூடுதல் நேரத்தில் ஐந்து நிமிடம் முடிவடைந்த நிலையில் ஜாபி அலோன்சோ உதைத்த free-kick தகர்க்கப்பட, பந்து ஸ்பெயின் அணி வீரர்களிடம் கிடைத்து பெட்ரோவுக்கு வழங்க அவர் இலக்கினுள் அடித்தார். அதை பெப்பே தலையால் முட்டி வெளியே தள்ள சரியாக இனியாஸ்ட்டாவிடம் கிடைக்க வேகமாக இலக்கை நோக்கை அடித்தார். ஆனால் தடுப்பு கள வீரர் மேலே அடித்து அவ்விடத்தை வெளியானது.

ஆட்டத்தின் 101வது நிமிடத்தில் corner-kick கிடைக்க அதை பயன்படுத்தி காப்பாளர் கட்டத்தினுள் நுழைய முயன்று மேலும் ஒரு corner-kick கிடைத்தது. இது முடிந்த இரண்டாவது நிமிடத்தில் ஸ்பெயினின் ஊடுருவல் மூலம் பெட்ரோ காப்பாளர் கட்டத்தினுள் வழங்கிய பந்தை இனியாஸ்டா இலக்கினுள் அடிக்க அருமையான முறையில் காப்பாளர் தடுத்தார். ஸ்பெயினுக்கு ஒரு அருமையான வாய்ப்பு பறிபோனது. கூடுதல் நேரத்தின் முதல் பாதி முடிவடையும் தருவாயில் ஸ்பெயினுக்கு free-kickமூலம் மேலும் ஒரு வாய்ப்பு. அதை செர்ஜியோ ராமோஸ் நேர்த்தியான முறையில் அடித்தார். ஆனால் இலக்கின் மிகமிக அருகில் வெளியே சென்றது. இத்துடன் கூடுதல் நேரத்தில் முதல் பாதி முடிந்தது. இன்னமும் ஆட்டம் சமநிலையிலேயே இருந்தது.

அடுத்த நிமிடத்திலும் யாரும் இலக்கு அடிக்கவில்லை என்றால் ஆட்டம் penalty shoot-out வைத்தே நிர்னைக்கப்படும்.

ஆட்டத்தின் 107வது நிமிடத்தில் அதிவிரைவாக பந்தை ஸ்பெயினின் காப்பாளர் கட்டத்தினுள் இருந்த ரொனால்டோவுக்கு செல்லும் முன் அடிக்க செர்ஜியோ ராமோஸ் அதை வெளியே அடித்துவிட்டார்.

ஆட்டத்தின் 110வது நிமிடத்தில் அருமையான முயற்சி. மீண்டும் ஸ்பெயின் வீரர்களின் ஒரு கூட்டு முயற்சி. அதை போர்ச்சுகல் காப்பாளர் நேர்த்தியான முறையில் தடுத்தார்.

மேறேலேஸ்க்கு பதில் வரேலா களம் இறக்கப்பட்டார். இவர் தான் போர்ச்சுகளின் யூரோ 2012இல் முதல் வெற்றிக்கு வித்திட்டவர்.

அதை தொடர்ந்து ஸ்பெயினின் ஒரு அதிரடி ஆட்டம். பாப்ரிகாஸ் பந்தை வேகமாக போர்ச்சுகளின் இலக்கினுள் எடுத்து செல்ல, புயலென வந்த போர்ச்சுகல் தடுப்புகள வீரர்கள் அவரின் முயற்ச்சியை தவிடுபொடி ஆக்கினர்.

ஸ்பெயின் வீரர் அல்பா போர்ச்சுகளின் காப்பாளர் கட்டத்தினுள் பந்தை வழங்க பெப்பே அருமையான முறையில் வெளியே தள்ளினார். மீண்டும் ஒரு வாய்ப்பு பெட்ரோ மூலமாக, அதையும் தடுத்தனர் போர்ச்சுகல் தடுப்பு வீரர்கள்.

மேலும் ஒரு வாய்ப்பு போர்ச்சுகல் வீரர்கள் தடுத்தனர். இத்துடன் 120 நிமிடங்கள் முடிந்தது. இப்பொழுது பெனால்டி மூலம் இறுதி போட்டிக்கு செல்லும் அணி உறுதி செய்யப்படும். இது இந்த யூரோ 2012இல் இரண்டாவது பெனால்டி. யூரோ 2012இல் முதலாவதாக இறுதி போட்டிக்கு செல்லும் அணியை பெனால்டி மூலம் முடிவு செய்ய இருக்கிறது.


ஜாபி அலோன்சோ – தடுக்கப்பட்டது
மொண்டின்ஹோ – தடுக்கப்பட்டது

ஸ்பெயின் 0 – 0 போர்ச்சுகல்

இனியாஸ்டா – இலக்கினுள் அடிக்கப்பட்டது
பெப்பே - இலக்கினுள் அடிக்கப்பட்டது

ஸ்பெயின் 1 - 1 போர்ச்சுகல்

பிக்கே – இலக்கினுள் அடிக்கப்பட்டது
நாணி - இலக்கினுள் அடிக்கப்பட்டது

ஸ்பெயின் 2 - 2 போர்ச்சுகல்

செர்ஜியோ ராமோஸ் - இலக்கினுள் அடிக்கப்பட்டது
ஆல்வேஸ் – கம்பியில் அடிக்கப்ட்டு வெளியானது
ஸ்பெயின் 3 - 2 போர்ச்சுகல்

பாப்ரிகாஸ் - இலக்கினுள் அடிக்கப்பட்டது
ஸ்பெயின் 4 - 2 போர்ச்சுகல்



Alemania 1-2 Italia Ozil 92' by medi1sport

யூரோ 2010இல் வாகையர் பட்டம் சூடிய ஸ்பெயின் அணி மீண்டும் இந்த முறை இறுதி போட்டிக்குள் நுழைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை பெறுகிறது.

No comments:

Post a Comment

பழமொழி