இன்றைய குறள்

Friday, June 29, 2012

யூரோ 2012 இரண்டாவது அரையிறுதி போட்டி ஜெர்மனி எதிராக இத்தாலி (Germany vs Italy)



இரண்டாவது காலிறுதியில் கிரீஸ் அணியை வென்ற ஜெர்மனியும், நான்காவது காலிறுதியில் இங்கிலாந்தை வென்ற இத்தாலி அணியும் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டி. உலக கோப்பை 2006 அரையிறுதி போட்டியில் சொந்த மண்ணில் தன்னை வீழ்த்திய இத்தாலியை பழி தீர்க்க வேண்டும் என்ற முனைப்போடு ஜெர்மனி விளையாடும். இத்தாலி இது வரை யூரோ அரையிறுதி போட்டிகளில் இலக்கு அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி போட்டியில் நுழைந்த பொழுது கூட பெனால்டியில் வென்று தான் நுழைந்திருக்கிறது.

ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த corner-kickஇல் குரூஸ் காப்பாளர் கட்டத்தினுள் அடிக்க, அதை கேதேரா இலக்கு நோக்கி அடிக்க, காப்பாளர் புப்பானை கடந்து சென்ற பந்தை இத்தாலியின் தடுப்புகள வீரர் பிர்லோ இலக்கினுள் நுழையாமல் தடுத்தார்.

பிர்லோ பாலடேல்லிக்கு வழங்கிய பந்தை அவர் காப்பாளர் கட்டத்தினுள் எடுத்து நுழைவதற்குள் தடுப்புகள வீரர்கள் தடுத்தனர். அடுத்த நிமிடத்தில் ஜெர்மனி வீரர் அடித்த பந்து இலக்கினுள் அடிக்க முயன்று நேராக புப்பான் கைகளுக்கே அடித்தார்.

ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் இத்தாலி காப்பாளர் இடத்து பக்கத்தில் இருந்து உள்ளே அடித்த பந்தை இலக்கினுள் அடிக்க, அதை புப்பான் அருமையாக தடுத்தார். இதன் மூலம் இத்தாலிக்கு ஒரு corner-kick கிடைத்தது. அதில் தனக்கு கிடைத்த பந்தை கூருஸ் இலக்கினுள் அடிக்க அருமையாக தடுத்தார் புப்பான்.

ஆட்டம் ஆரம்பித்த முதல் 15 நிமிடத்தில் ஜெர்மனி அணியே இலக்கு நோக்கி அடிக்க முயன்றது.

ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஜெர்மனியின் காப்பாளர் கட்டத்திற்கு வெளியே இருந்து கசானோ அடித்த பந்தை, காப்பாளர் நெயுளர் தன்னுடைய வலது பக்கம் கீழே வீழ்ந்து அருமையாக தடுத்தார். அதே போல் மீண்டும் ஒரு வாய்ப்பு அடுத்த நிமிடத்தில் இம்முறை இடது பக்கத்தில் வீழ்ந்து தடுத்தார்.



ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் காப்பாளர் கட்டத்தினுள் அருமையான பந்தை கசானோ வழங்க, மிதந்து வந்த அப்பந்தை பாலடேல்லி சிறப்பான முறையில் தலையில் முட்டி இலக்கு அடித்தார். இதன் மூலம் இத்தாலி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.


Germany Vs Italy Mario Balotelli Amazing Goal... by kofiswag


ஆட்டத்தின் 27வது நிமியாத்தில் ஓஸில் அடித்த பந்தை புப்பான் அருமையாக தடுத்தார்.

ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் புப்பானின் இடது புறத்தில் இருந்து போடேங் வழங்கிய பந்தை இலக்கினுள் அடிக்க முயல இத்தாலியில் தடுப்பு வீரர் அருமையான முறையில் வெளியே அடித்துவிட்டார்.

கேதாராவின் முயற்சி ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் அருமையான முயற்சி தடுக்கப்பட்டத்து. ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் அருமையான ஒரு நிகழ்வு நடந்தது. பாலடேல்லிக்கு மொண்டோளிவோ பந்தை வழங்க அதை அவர் நேர்த்தியான முறையில் எடுத்துச்சென்று இலக்கினுள் அடித்தார்.



முதல் பாதி முடியும் நேரத்தில் ஜெர்மனியின் லாம் மூலம் நல்ல முயற்சி. ஆனால் புப்பான் முன்னேறி வந்து அப்பந்தை பிடித்தார். ஜெர்மனி ரசிகர்களின் சோக முகங்களை காண முடிகிறது. முதல் பாதி முடிவடைந்த நேரத்தில் இத்தாலி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாம் பாதி துவக்கத்தில் ஜெர்மனி வீரர்கள் எப்படி தங்களுடைய அணியை மீட்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் நேயுஸ் அருமையான முறையில் இத்தாலியின் தடுப்புகள வீரர்களை கடந்து பந்தை எடுத்துச்சென்று இலக்கினுள் அடித்த பந்தை புப்பான் தடுத்தார். இரண்டு நிமிடம் கழித்து அருமையாக பந்தை ஜெர்மனி வீரர்கள் தங்களுக்குள் வழங்கியபடி காப்பாளர் கட்டத்தினுள் நுழைந்து, தனக்கு கிடைத்த பந்தை லாம் இலக்கினுள் அடிக்காமல் வெளியே அடித்தார். ஒரு அருமையான வாய்ப்பு பறிபோனது. தவரவிடப்பட்டது என்றே சொல்லலாம்.

இத்தாலியின் கசானோ ஜெர்மனியின் தடுப்புகள வீரர்களை தாண்டி காப்பாளர் கட்டத்தினுள் அருமையாக பந்தை வழங்க உள்ளே இருந்த ஜெர்மனியின் தடுப்புகள வீரர்கள் இத்தாலி வீரர்களிடம் பந்து சிக்காமல் வெளியே தள்ளினர்.

ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் ஓஸில் கேதேராவின் கூட்டணி இத்தாலி காப்பளார் கட்டத்தினுள் புகுந்து இலக்கினுள் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் இலக்கினுள் அடிக்க இயலவில்லை.

ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. ஜெர்மனி வீரர்கள் இத்தாலியின் காப்பாளர் கட்டத்தினுள் நுழைந்து தங்களால் இயன்றதை முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.

ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் பாலடேல்லிக்கு வழங்கிய பந்தை கடத்திக்கொண்டு காப்பாளர் கட்டத்திற்கு உள்ளே இருந்து இலக்க்னுள் அடிக்க முயற்சி செய்து வெளியே அடித்தார். மேலும் ஒரு இலக்கு அடிக்கும் வாய்ப்பு.

ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் காப்பாளர் கட்டத்திற்கு வெளியே கிடைத்த free-kickகை பயன்படுத்தி ரேயுஸ் இலக்கு நோக்கி அடித்த பந்தை புப்பான் அருமையாக தடுத்தார். நிச்சயம் இலக்கினுள் இப்பந்து புகுந்திருக்கும். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு corner-kick கிடைத்தது. அதை நேர்த்தியான முறையில் தகர்த்தனர் இத்தாலி வீரர்கள்.

மேலும் ஒரு வாய்ப்பு இத்தாலிக்கு, 3-0 என்று முன்னிலை வகிக்க, ஆனால் இலக்கினுள் அடிக்காமல் அப்பந்து வெளியே அடிக்கப்பட்டது. இப்பொழுது இத்தாலி தங்களுடைய தடுப்பு களத்தை பலப்படுத்த முன்கள வீரர்களை தடுப்புகள வீரர்களை இறக்கி மாற்றினர்.

ஆட்டம் 70 நிமிடத்தை கடந்து சென்று கொண்டு இருந்தது. ஜெர்மனி வீரர்கள் 20 நிமிடத்தில் 2 இலக்குகள் அடித்தால் தான் இத்தொடரில் நிலைக்க முடியும் என்ற நிலை.

ஜெர்மனி வீரர்கள் நேர்த்தியான முறையில் பந்தை கடத்தி சென்று இத்தாலி காப்பாளர் கட்டத்தினுள் வழங்கிய பொழுது அதை இத்தாலியின் தடுப்பு கள வீரர்கள் நேர்த்தியான முறையில் தடுத்தனர்.

அருமையாக வெட்டி இலக்கினுள் அடிக்க முயன்று வெளியே அடித்தார். அருகில் இருந்த சகவீரர் டி-நத்தாலேவுக்கு வழங்கியிருந்தால் நிச்சயம் இலக்கினுள் அடித்திருப்பார். ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் பிர்லோ வழங்கிய பந்தை டி-ரோஸி சிறப்பாக இலக்கினுள் அடிக்க ஜெர்மனி காப்பாளர் அதை சிறப்பாக பிடித்தார்.

அடுத்த நிமிடத்தில் பந்தை எடுத்து சென்ற ஜெர்மனி வீரகளிடம் இருந்து பந்தை காப்பாளர் கட்டத்தினுள் இருந்து வெளியேற்ற முயற்சி செய்த பொழுது அது குரூஸிடம் கிடைக்க, அவர் அதை இலக்கினுள் அடிக்க முயன்று சற்று உயரமாக அடித்தார். மேலும் ஒரு வாய்ப்பு நழுவியது.

ஆட்டத்தின் இறுதி 10 நிமிடம். டி-நடாலேவுக்கு பந்து வழங்கப்பட, அவர் தனியாக ஜெர்மனி இலக்கு நோக்கி சென்றார். எந்த ஒரு தடுப்பு வீரரும் இல்லாமல் தனியாக சென்று இலக்கினுள் அடிகாமல் வெளியே அடித்தார். இதில் இலக்கு அடித்திருந்தால் இறுதி போட்டிக்குள் இத்தாலி நுழைவது நிச்சயம் உறுதி செய்யப்பட்டு இருக்கும்.

அதே போல் மற்றும் ஒரு வாய்ப்பு இத்தாலிக்கு அடுத்த இரண்டு நிமிடத்திலேயே கிடைத்தது. ஆனால் off-sideஇல் இருந்து முயன்றதால் அதுவும் பரி போனது.

இத்தாலி வீரர்கள் காப்பாளர் கட்டத்தினுள் சிறப்பாக தடுப்புஅரண் அமைத்து ஜெர்மனி வீரர்களின் முயற்சிகளை தடுத்தனர். பல முறை தடுப்பு அரணை தகர்த்து உட்புகுர்ந்த போதிலும் ஜெர்மனி வீரர்களால் இலக்கடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்கள். இத்தாலி இறுதி போட்டியினுள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலை.

மேலும் ஒரு முயற்சி ஆட்டத்தின் 87வது நிமிடத்தில். ஆனால் புப்போன் முன்னேறி வந்து தடுத்தார். இந்நேரத்தில் இத்தாலி வீரர்கள் தேவை இல்லாமல் தவறு செய்து மஞ்சள் அட்டை வாங்கினர். ஆருதளுக்காவது ஜெர்மனி ஒரு இலக்காவது அடிப்பார்கள் என்று எண்ணியது கடைசி நிமிடங்களில் பறிபோனது. ஆட்டத்தின் கடைசி சில துளிகள். ஆனால் இத்தாலியின் தடுப்பு அரண் மிக மிக வலுவாக தன்னுடைய வேலையை செய்தது. காப்பாளர் அட்டத்தினுள் மிதந்து வந்த பந்து இத்தாலி தடுப்புகள வீரரின் கையில் பட்டு penalty வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி அருமையான முறையில் இலக்கினுள் அடித்தார் ஓஸில்.


Alemania 1-2 Italia Ozil 92' by medi1sport

இப்பொழுது இத்தாலி வீரர்களுக்கு பதட்டம் அதிகமானது.

மேலும் ஒரு இலக்கு அடித்தால் ஆட்டம் சமநிலைக்கு வந்துவிடும் நிலை. ஜெர்மனியின் காப்பாளர் முன்னேறி வந்து பந்தை பின்னால் செல்ல விடாமல் விளையாடினார்.

பதட்டம் நிறைந்த கடைசி நொடிகள். ஜெர்மனிக்கு கடைசி வாய்ப்பு. அப்பந்தை சரியாக எத்திய பொழுது ஆட்டம் முடிவடைந்தது.

இத்தாலி 2-1 என்ற கணக்கில் இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் ஸ்பெயினுடன் பலப்பரிட்சை செய்ய தயாரானது.

No comments:

Post a Comment

பழமொழி