இன்றைய குறள்

Monday, June 11, 2012

யூரோ 2012 - ஸ்பெயின் எதிர் இத்தாலி (Spain vs Italy)

உலக கால்பந்து அரங்கில் உலக கோப்பைக்கு பிறகு அதிக முக்கியத்துவம் வாய்ந்த யுரோ இந்த ஆண்டில் போலந்து மற்றும் உக்ரேன் நாடுகளில் நடந்து கொண்டு வருகிறது.



2008 யுரோ போட்டியிலும், 2010 உலக கோப்பையிலும் வாகையர் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியும், 2006 உலக கோப்பையில் வாகையர் பட்டம் வென்ற இத்தாலி அணியும் நேற்று (10-6-2012)மோதின.

ஸ்பெயின் அணி


இரண்டு அணியுமே சம பலம் பொருந்திய அணிகளாக களம் இறங்கியது. இரண்டு அணியிலும் சிறப்பான வீரர்கள் இருந்தனர்.

இத்தாலி அணி


ஆட்டம் துவங்கிய பொழுது இத்தாலியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. இத்தாலி வீரர் பிர்லோ 13வது நிமிடத்தில் காப்பாளர் கட்டத்துக்கு வெளியே இருந்து உதைத்த பந்தை ஸ்பெயின் காப்பாளர் காசியாஸ் அருமையாக தடுத்தார். அவரே மீண்டும் கசானோ 45 நிமிடத்தில் தலையால் முட்டி அடித்த பந்தை மிக மிக அற்புதமான முறையில் தடுத்தார். இதையடுத்து முதல் பாதி முடிந்தது. முதல் பாதியில் இரண்டு அணியும் 0-0 என்று சம நிலையில் இருந்தனர்.

இரண்டாம் பாதியில் துவக்கத்தில் இருந்தே இரண்டு அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இத்தாலி வீரர் பலடேலி 52வது நிமிடத்தில் செர்ஜியோ ராமோஸ் வைத்து தடுமாறிய பந்தை எடுத்து இலக்கை நோக்கி முன்னேறினார். அவரும் ஸ்பெயின் காப்பாளர் மட்டுமே இருந்த நேரத்தில் பந்தை இலக்கு நோக்கி உதைக்காமல் நேரம் கடத்திகொண்டே முன்னேறினார். அதற்குள் பின்னால் இருந்து வந்த ராமோஸ் பந்தை அவரிடம் இருந்து பறித்தார். இதனால் இத்தாலிக்கு அருமையான ஒரு வாய்ப்பு நழுவியது.




இதை தவரவிட்டதினாலோ என்னவோ பலோடேலி நீக்கப்பட்டு மாற்று ஆட்டக்காரர் டி நட்டாலே களம் இறங்கினார்.



ஆட்டம் அதே விறுவிறுப்போடு நடந்து கொண்டு இருந்தது. 59வது நிமிடத்தில், இத்தாலி வீரர் பிர்லோ, பந்தை ஸ்பெயின் அணியினரிடம் சிக்காமல் எடுத்து வந்து இலக்கு இருக்கும் திசை நோக்கி எத்தினார். அப்பொழுது டி நட்டாலே, ஸ்பெயின் வீரர்கள் ராமோஸ் மற்றும் பிக்கே நடுவில் இருந்து புயல் வேகத்தில் முன்னேறி பந்தை தன்வசமாக்கி முன்னேறினார். ஸ்பெயின் வீரர்கள் இருவரும் நட்டாலேவை துரத்தியபடிய வந்தனர். காப்பாளர் காசியாஸ் தனியாக நின்று கொண்டு இருந்தார். அவர் முன்னேறி நட்டாலேவிடம் இருந்து பந்தை தடுக்க நினைத்தார். ஆனால் நட்டாலே உதைத்த பந்து, சரியாக இலக்கினுள் சென்று இத்தாலி 1-0 என்று முன்னிலை வகித்தது.



மனம் தளராத ஸ்பெயின் அணியினர் பந்தை தங்கள் வசமே வைத்துக்கொண்டு இலக்கை நோக்கி விரைந்தனர். 62வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியாஸ்டா, காப்பாளர் கட்டத்துக்கு வெளியே இருந்து உதைக்க, அந்த பந்து இத்தாலி காப்பாளர் புப்பானிடம் தஞ்சம் புகுந்தது. இது நடந்தேறிய அடுத்த நிமிடம், மீண்டும் இனியாஸ்டா சக வீரர் டேவிட் சில்வாவிடம் பந்தை கொடுக்க, அவர் இத்தாலி வீரர்களை சமாளித்து பாபிரிகாஸிடம் கொடுக்க நேர்த்தியான முறையில் இலக்கை நோக்கி உதைத்தார், காப்பாளர் புப்பான் பிடிக்க தவறியதால் மீண்டும் இரு அணியினரும் 1-1 என்ற சமநிலையில் இருந்தனர்.



பிறகு, ஸ்பெயின் வீரர் பாபிரிகாஸுக்கு பதில் பெர்னாண்டோ டோர்ரஸ் களம் இறங்கினார். அவருக்கு 74வது நிமிடத்தில் பந்து கிடைக்க தனியாக இலக்கை நோக்கி முன்னேறினார். அவர் பந்தை கட்டுபடுத்த முடியாமல் அது முன்னே செல்ல, தனியாக நின்று கொண்டு இருந்த புப்பான் சுதாரித்து கொண்டு வேகமாக முன்னேறி வந்து பந்தை தடுத்தார். அனைத்து ரசிகர்ககும் இலக்கை நோக்கி டோர்ராஸ் அடித்துவிடுவார் என்று எண்ணினர். ஆனால் புப்பானின் ஆட்டத்தால் அது தகர்கப்பட்டது.


பந்து இத்தாலி வீரர்களின் வசம் வந்தது.
76வது நிமிடத்தில் ஸ்பெயினின் காப்பளார் கட்டத்துக்குள் மிதந்து வந்த பந்தை, டி நட்டாலே பறந்து உதைக்க அது இலக்கின் கம்பிக்கு வெளியே சென்றது!

ஆட்டம் பரபரப்பான கடைசி வது நிமிடம் நடத்துகொண்டு இருந்தது. அப்பொழுது 84வது நிமிடத்தில் டோர்ரேஸ்க்கு அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்தது. பந்து அவர் வசம் இருந்தது. தடுப்பாட்டம் ஆடும் இத்தாலி வீரர்கள் அவர் இடம்வலம் இருக்க வேகமாக முன்னேறி சென்றார். இத்தாலி காப்பாளர் கட்டத்தினுள் நுழைய முயலும் பொழுது புப்பான் முன்னேறி வர, அவரை தாண்டி பந்தை உத்தைத்தார் டோர்ராஸ். அது இலக்கின் கம்பிக்கு மேலே சென்றுவிட்டது. 2-1 என்ற இலக்கு கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்து, 1-1 என்று ஆட்டம் சமநிலையிலேயே முடிவடைந்தது!


ஆட்டம் சமநிலையில் முடிந்தாலும் ரசிகர்களுக்கு நல்லதொறு ஆட்டமாக இது அமைந்தது.

No comments:

Post a Comment

பழமொழி