மலைகளை தாங்கினாய்
காடுகளை வளர்த்தாய்
சோலைவனம் கொடுத்தாய்
மலைகள்வெப்பமாகி எரிமலையானதேன்?
காடுகள் அழிந்து கட்டாந்தரை ஆனதேன்?
சோலைவனத்தை சுற்றி பாலைவனமாதேன்?
கடல் மாதா மெல்ல மெல்ல
உன்னை திண்பதேன்?
வளி மண்டலத்தில் பொத்தல்
வீழ்ந்து
சூரியனும் உன் மீது கோப
கனலை உமிழ்ந்ததேன்?
ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை
உன்னில் சுமந்த பொழுது இல்லாதது அனைத்தும்
நீ ஆறறிவை சுமந்த தொடக்கத்தில்
நடந்தேரியத்தை
அறியாதது ஏன்?
அதனால் தான் இன்று ஒரு ஆறறிவு
உன்னை கேள்வி கேட்கிறது!
No comments:
Post a Comment